பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 109 யர்கள். அவ்வாறு கூறுவதை விடச் சொல் பிறப்ப தற்கு உரிய சொல் என்பது மிகப் பொருத்தமான தாகும். உரிச் சொல் பற்றி ஆசிரியர் தொல்காப்பிய னார் கூறும் நூற்பாவும் இக் கூற்றை வலியுறுத்தி நிற்கின்றது. “ உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப் பெயரினும் வினையினும் மெய்தடு மாறி ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும் பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும் பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபின் சென்று நிலை மருங்கின் எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்." உரிச் சொல் (வேர்ச் சொல்), இசை, குறிப்பு: பண்பு என்னும் பொருள்களுள் ஒன்றின் அடிப்படை யில் தோன்றும்; தொடக்க நிலையில் பெயராகவும் பயன்படுத்தலாம்; வினையாகவும் பயன்படுத்தலாம். 'கழி' என்பது கழித்தல் என்ற பெயரையும், கழிந் தான் என்ற வினையையும் தோற்றுவிக்கும். ஒரு சொல் பல பொருட்குரிமையாதல் உண்டு. 'கடி' என்ற உரிச்சொல் வரைவு, கூர்மை, காப்பு,புதுமை, விரைவு, விளக்கம், மிகுதி, சிறப்பு, அச்சம் முதலிய பொருள்களைத் தரும். மாந்தர்க்கு அறிவு வளர்ச்சி யடையாத நிலையில், புதுச் சொற்களைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் அற்ற காலத்தில் ஒரு சொல்லின் அடியைக் கொண்டேதான் பல பொருள்களை விளக்கு. வதற்குரிய சொற்களைப் படைத்துக்கொள்ள முயன் றிருப்பர். ஒரு பகுதியில் உள்ளவர்கள் இன்னொரு பகுதியில் உள்ளவர்களோடு நெருங்கி உறவாடிப் பழக முடியாத காலத்தில் ஒரே கருத்தை விளக்கவே. அவரவரும் தாம் தாம் அறிந்தவாறு சொற்களைப்