பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 111 சொல்லுக்கு இன்னல் என்னும் பொருள் உண்டென் பது அகராதியில்லா அக்காலத்தில் எவ்வாறு அறிய முடியும். “செல்லல் இன்னல் இன்னாமையே" என்று ஆசிரியர் தொல்காப்பியர் கூறுகின்றார்.எவ் விடத்து இன்னல் என்னும் பொருளது, எவ்விடத்து இன்னாமை என்னும் பொருளது என்பதனைச் சொற் றொடர் வாயிலாகத்தான் அறிய முடியும். அன்றியும் இவ்வாறு சொற்றொடரில் பயின்று வருங்கால் தொல்காப்பியர் கூறாத வேறு பொருள் தோன்றினும் அதனையும் ஏற்றுக் கொள்க என்கின்ற பெருந்தகை மையும் மொழி நூலறிவும் பாராட்டப்பட வேண்டியன. கூறிய கிளவிப் பொருள்நிலை அல்ல வேறுபிற தோன்றினும் அவற்றொடும் கொளலே" ஒரு சொல்லுக்குப் பொருள் இது என்று இன் னொரு சொல்லால் அறிவிக்குங்கால் ஒருவனால் விளங்கிக் கொள்ள இயலவில்லையானால் மீண்டும் ஒரு சொல்லால் விளக்கத் தொடங்கினால் வரம்பின்றிச் செல்லும் என்றும், உணர்த்தும் முறையில் உணர்த்த வேண்டும் என்றும், உணர்வோர்க்கே உணர்த்த வேண்டும் என்றும் அறிவுறுத்தும் நுட் பம் அறிந்து மகிழ்தற்குரியது. .. பொருட்குப் பொருள் தெரியின் அது வரம்பின்றே" 'பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின் ” "உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே 14 இவ்வுரிச் சொல் அடிப்படையாகப் பல உறுப்புக்கள் சேர்ந்து ஒரு முழுச் சொல் உருவாகின்றது. முழுச்