பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 நிறைவுறாது. தொல்காப்பிய ஆராய்ச்சி ஆசிரியர் தொல்காப்பியர் சிறந்த மொழி நூலறிஞர் ஆதலின் இவைபற்றியும் ஆராய் கின்றார், " இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே ' என்னும் நூற்பாவில் இயற்சொல் என்பது உரை மொழிக்குரியது, திரிசொல் என்பது நூல் மொழிக் குரியது, இவையிரண்டும் ஒரு மொழிக்கே யுரியன வாய் அடிப்படையாய் உள்ளன. திசைச் சொல் என்பது ஒரு மொழியிலிருந்து கிளைத்து வேற்று மொழியாகும் நிலையை அடைவதற்குரியதாய் தன்னைச் சுற்றிலும் வழங்குவது. மலையாளம் தமிழினின்று கிளைத்தது. தமிழினின்றும் வேறுபடும் நிலையை அடையுங்கால் அதன் சொல் தமிழின்கண் ஆளப்படு மேல் அது திசைச் சொல் எனப்படும். இதனைக் கொடுந்தமிழ் என்றும் கூறுப. வடசொல் என்பது வேற்றுமொழிக் குரியது. தமிழோடு தொடர்பு கொண்ட முதல் வேற்றுமொழி ஆரியமேயாகும். ஆரியம் வடக்கிலிருந்து வந்து தமிழோடு தொடர்பு கொண்டமையின் அது வடமொழி எனப்பட்டது. இந்நான்கு வகையாலும் சொற்கள் கொள்ளப்பட்டு மொழி கருத்தறிவிக்கும் கருவியாய் விளங்கும். வேற்று மொழிச் சொற்கள் சொல் வளத்திற்கு வேண்டப்படுவனவோ என வினவலாம். ஒரு மொழி யாளர் இன்னொரு மொழியாளருடன் கூட்டுறவு கொள்ளுங்கால் இருவர் மொழியும் கலப்புறுதல் இயற்கை. ஆனால் அக்கலப்புக்கு வரையறையுண்டு. பெயர்ச் சொற்களைத்தான் ஏற்றுக் கொள்ளலாம். என்பதே அவ்வரையறை. 'இராமன்' என்பது வடமொழிச் சொல். அதனைத் தமிழில் மொழி பெயர்த்