பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 தொல்காப்பிய ஆராய்ச்சி நிலை. பொருளோடு புணர்தல் என மூன்று வகைப்படும். தமிழில் அசையழுத்தம் இல்லை யென்பாரும் உளர். அசையழுத்தம் என்பது சொற்களின் ஒலி நிலை எனலாம். ஒலி நிலையால் பொருளை வேறு படுத் துதல் தமிழில் உண்டு. ஒரு சொல்லிலும் உண்டு ; இரண்டு மூன்று சொற்களால் தொடர்ந்து தொகைச் சொற்களாக வரும் சொற்களிலும் உண்டு. . 'செய்யேன்' என்னும் சொல்லுக்கு 'நீ செய்வா யாக' என்ற பொருளும், 'நான் செய்யமாட்டேன் என்ற பொருளும் உண்டு. எப்பொருளைக் கருதிக் கூறுகின்றோம் என்பதை ஒலி நிலையால்தான் அறிவித்தல் வேண்டும். தபு என்பதைப் படுத்துச் சொன்னால் (மெல்லிய குரலில் கூறினால்) நீ சா என்றும், எடுத்துச் சொன்னால் (உரத்த குரலில் கூறினால்) நீ சாவப் பண்ணு' என்றும் பொருள் தரும். இவைகளை எழுத்ததிகாரத்தில் கூறியவர் இங்குச் சொற்கள் தொடர்ந்து தொகையாக நிற்பதை யும் அத்தொகைச் சொற்களுள் ஒலி நிற்கும் நிலைகளை யும் உணர்த்துகின்றார். . தொகைச் சொற்கள் வேற்றுமைத் தொகை, உவமைத் தொகை, வினைத் தொகை, பண்பு தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை என ஆறு வகைப்படும். இவைகள் ஒன்றுக்கு மேற் பட்ட சொற்களால் உருவாகி இருந்தாலும் ஒரு சொல் போன்று தான் ஒலிக்கப்படல் வேண்டும் என்பதனை "எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய" என்ற நூற்பாவால் அறிவுறுத்துகின்றார். அசையழுத்தத்தால் (Accent) பொருள் அறிவிக்கப் படுதலின் அதனைப் பொருள் நிலை என்றே சுட்டு