பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 வேண்டும். இவ்விருவருள் எவர் முற்பட்டவர்? தொல் காப்பியரா? திருவள்ளுவரா? தமிழக ஆராய்ச்சியாளருட்சிலர் திருவள்ளுவரைத் தொல்காப்பியர்க்கு முற்பட்டவர் என்று கூறுகின்றனர். அங்ஙனம் கூறுவது உலகப் பெரும் புலவர் வள்ளுவர் பாற் கொண்டுள்ள பற்றுதலால்தான் என்று கருத வேண்டியுளது.உயர் அறங்களை உலகுக்கு அறிவிப் பதில் முதற் பாவலராய் இருப்பவர் காலத்தானும் முற் பட்டவராகத்தான் இருத்தல் வேண்டும் என்று எண்ணி விட்டனர் போலும். காலத்தால் முற்பட்டவர் என்ப தால் பெருமையும் பிற்பட்டவர் என்பதால் சிறுமையும் உண்டு என்று கருதுவது மிக மிகத் தவறேயாகும். இரு பெரும் புலவர்களும் இரு வேறு துறைகளில் இணையற்ற வர்கள் என்பதில் எட்டுணையும் ஐயமின்று. முற்பட்ட காலத்தின் துணைகொண்டு முற்பட்டவராக விளங்க வேண்டிய நிலையில் இருவரும் இலர். ஆதலின் காய்தல் உவத்தல் இன்றி இருவருள் எவர் காலத்தால் முற் பட்டவர் என்று ஆராய்தல் நமது கடனாகும். தொல்காப்பியர், திருவள்ளுவருக்குக் காலத்தால் முற்பட்டவர் என்பதனை இருவர் நூல்களுமே எடுத்துக் காட்டுகின்றன. தொல்காப்பியர். "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தின் வழக்கும் செய்யுளும் ஆராய்ந்து இலக்கணம் கூறப் புகுந்தார். இலக்கண ஆசிரியர் இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் இயம்புவார். இலக்கண ஆசிரியர் கூறி யுள்ள இலக்கண வரம்பைக் கடந்து செல்லும் உரிமையும் இயல்பும் உடையவர் இலக்கிய ஆசிரியர். இலக்கிய ஆசிரியரால் வளம்பெறும் மொழி என்றும் ஒரே நிலையானதாக இராது. காலந்தோறும் மாறுத லடையும். இலக்கண வரம்புக்குட்பட்டு மாறுத