பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 லடைதல் மொழி வளர்ச்சியின் இன்றியமையாத நெறி யாகும். இலக்கண ஆசிரியராம் தொல்காப்பியர் இம் மொழியியல்பை நன்கு அறிந்த மொழி நூற் புலவ ராவார். அதனால் தாம் கூறும் இலக்கண வரம்புகட்கு விதிவிலக்களிக்கும் புறனடை நூற்பாக்களை ஆங்காங்கே புகன்றுள்ளார். திருவள்ளுவர். சமயக்கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருளிதுவென்றமெய்ந்நெறியாளர் மட்டுமல்லர்; நவில்தொறும் நவில்தொறும் இன்பம் பயக்கும் இலக்கியப் புலவருமாவார். தமிழ்மரபைத் தழுவி, இலக்கண வரம்புக்குள் நின்று தமது இறவாப் புகழ் நூலாம் தமிழ்மறையை இயற்றியுள்ளார். ஆயினும் தம்காலத்து வழங்கும் மொழிமரபைப் புறத் தொதுக்கிச் செல்லும் ஆற்றல் பெற்றாரிலர். மக்கட்குப் பயன்பட விரும்பும் மக்கட் புலவர் என்றும் அவ்வாறு செல்ல விரும்பார். ஆதலின் மக்கட்புலவராம் வள்ளுவர் பெருமான் சிற்சில இடங்களில் பழைய இலக்கண வரம்பைக் கடந்து புதிய இலக்கண நெறிக்குக் கால் கோள் செய்துள்ளார். தொல்காப்பியர்க்கும் இஃது உடன்பாடே என்பது அவர் கூறியுள்ள கடி சொல் லில்லைக் காலத்துப்படினே என்ற நூற்பாவால் அறிய லாம். ஆகவே திருவள்ளுவர் தொல்காப்பிய நெறியைப் புறக்கணித்துச் சென்றாரிலர் என்று அறியலாம். தொல்காப்பியர் 'கள்' என்னும் ஈறு பலவின் பாலை உணர்த்தவரும் என்று கூறியுள்ளார். ஆனால் திருவள்ளுவர் கள் ஈற்றை உயர் திணைப் பன்மையை உணர்த்தவும் பயன்படுத்தியுள்ளார். துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றையவர்கள் தவம்.'