பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 தொல்காப்பிய ஆராய்ச்சி களமும், ஆண் பெண் சமத்துவ உரிமைப் பண்பும் காதலே. அக் காதல் வாழ்வே இலக்கியத் தோற்றத் திற்கு உரிய விளை நிலமாதலின் அது பற்றி இலக்கி யத்தில் கூறும் மரபுகளைத் தொகுத்துரைப்பதே அகத்திணையியலாகும். காதலை 'அகம்' என்றது ஏன்? ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்ததெனக் கூறப் படாததாய், யாண்டும் உள்ளத் துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார் என்று நச்சினார்க்கினியர் உரைத் துள்ளமை காண்க. அகத்தே நிகழ்கின்ற காதல் இன்பத்தை அகம் என்றது ஆகு பெயராம். இக்காதல் ஒழுக்கம் எழுவகையாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அவை கைக்கிளை, ஐந்திணை, பெருந் திணை எனப்படும். கைக்கிளை என்பது ஆண் பெண் எனப்படும் இரு சாராருள் ஒருவர் மட்டும் காதலித்தல் ஆகும். காதலைப் பற்றி அறிந்து அதன் இன்பம் துய்க்கும் பக்குவம் பொருந்தப் பெறாத இளையாள் ஒருத்தி யிடம் ஒருவன் தன் காதல் குறிப்பை அறிவித்து அவளிடம் அதற்குரிய வாய்ப்பினைப் பெறாது வருந்து வான். வருந்துங்கால், இவளை யான் தலைவியாகக் கொண்டால்தான் உயிர் வாழ்வேன் ; இல்லையேல் என் வாழ்வால் பயனில்லை. என் காதல் நோய்க்கு இவளே மருந்தாவாள். அங்ஙனமிருந்தும் இவளும் விரும்பிலள் ; இவள் பெற்றோரும் இவளை எனக்கு "