பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 133 இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்கள். குறிஞ்சி மிக்கிருந்த நிலத்தைக் குறிஞ்சியென்றும், மருதம் மிக்கிருந்த நிலத்தை மருதம் என்றும் அழைத்தனர். பின்னர் குறிஞ்சி நிலத்திற்குச் சிறப்பான கூடல் ஒழுக்கத்தைக் குறிஞ்சி என்று அழைத்தனர் ஆதல் வேண்டும். ஐந்திணைகளாக உலகத்தைப் பிரித்தனர். ஐந்திணைகளே இலக்கியத்திற்குரியனவாயிருந்தன. இவைகள் முதல், கரு, உரி என முப்பெரும் பிரிவை உடையனவாய் இருந்தன. ஒவ்வொரு திணைக்கும் முதல், கரு, உரி என்பன தனித்தனியே வரையறுக்கப் பட்டன. முதல் என்பது நிலனும் பொழுதும்.

  • முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்

இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே" என்பர் ஆசிரியர். உலகத்திற்கு முதன்மையாக இருப்பன இவையே யன்றோ! இவை யாரால் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டன என்று வரையறுத்துக் கூற முடியாத இயல்பினவாக இருக்கின்றன. இடமும் காலமும் என்றும் உள்ளனவாதல் வேண்டும். ஆகவே என்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு நோக்கின் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தது ஆகின்றது. 0 நிலம் நால்வகையாகப் பிரிக்கப்பட்டது. காடுறையுலகம், மை வரை (மலை) உலகம், தீம்புனல் உலகம், பெருமணல் உலகம் என்பனவாக முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச் சொல்லப்பட்டன. உலகம் இந்நால்வகை இயற்கைப்