பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தொல்காப்பிய ஆராய்ச்சி பிரிவினுள் அடங்கிவிடுகின்றது. பாலையின் தோற்றம் இயற்கையன்று. நிலைத்தலும் அன்று. சோலை நிலம் பாலையாவதும், பாலை நிலம் சோலையாவதும் என்றும் நிகழக்கூடியனவே. ஆதலின் ஆசிரியர் பாலையை நிலப் பகுப்பினுள் சேர்த்திலர். இப்பிரிவு தமிழ் நாட்டுக்கு மட்டும் உரியதன்று; உலகத்திற்கே உரியது என்பதனை உணர்த்தவே காடுறை உலகம், மலை உலகம் என்றும் குறிப்பிட்டனராதல் வேண்டும். உலகக் கண்ணோட்டம் உலகில் அண்மைக் காலத்தே தோன்றி வளர்ந்து வருகின்றது. நாடுகள் என்ற நினைப்பற்று உலகம் ஒன்று என்ற எண்ணம் உருப்பெற்று ஓங்க வேண்டும் என்று இந்த நூற் றாண்டில்தான் முழங்குகின்றனர். ஆனால் நம் தமிழ் முன்னோர்கட்குப் பண்டே இவ்வுணர்வு தோன்றி விட்டது என்பதைத் தொல்காப்பியத்தாலும், பிற இலக்கியங்களாலும் அறியலாம். "மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே. ஒரு நிலப் பகுதியைக் குறிப்பிடுங்கால் அந்நிலப் பகுதியில் சிறப்பாகக் கிடைக்கும் விளைபொருள் களையோ, செய்பொருள்களையோ எடுத்து மொழிவது தான் இயல்பு. ஆனால் ஆசிரியர் தொல்காப்பியர் அந்நிலத்து மக்களால் வழிபடப்படும் கடவுளினைச் சிறப்பாக எடுத்து மொழிகின்றார். மக்களுக்குக் கடவுள் பற்றும் கடவுள் உணர்வும் இன்றியமை யாதன என்பதனை வலியுறுத்தவே ஆசிரியர் இவ்வாறு கூறியுள்ளாராதல் வேண்டும்.