பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 135 இங்குக் கூறப்பட்டுள்ள மாயோன், சேயோன் வேந்தன், வருணன் முதலிய கடவுளர்கள் திருமால், முருகன், இந்திரன், வருணன் ஆவார்கள் என்றும், இவர்கள் ஆரியர்களால் வணங்கப்பட்டவர்கள் என் றும், ஆகவே ஆரியர்களின் தொடர்பு தமிழர்கட்கு உண்டான பிறகே இக் கடவுள் வழிபாடு இத்தமிழ கத்தில் நிலைபெற்றது என்றும் கருதுவாரும் உளர். ஒரு பெயர் ஓருருவம் ஒன்று மில்லாக் கடவுளுக் குப் பல பெயர்களிட்டுப் பல வழியாக வழிபடுதல் தமிழர் இயல்பு. பெயர் பலவாயினும் கடவுள் ஒருவரே என்ற உணர்வு தமிழர்க்கு என்றும் உண்டு. இந்நூற்பாவில் கூறப்பட்டுள்ள மாயோன், சேயோன். வேந்தன், வருணன் முதலியனவும் ஒரு கடவுளைச் சுட்டுவனவே. மாயோன் என்றால் அழியாதவன்; சேயோன் என்றால் சேய்மையிலுள்ளவன்; அறிவுக்கு எட்டாதவன்; வேந்தன் என்றால் தலைவன், விரும்புதற் குரியவன். வருணன் என்றால் நிறங்களுக்குரியவன் என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு பொருள் கொண்டால் நான்கு பெயர்களும் ஒரு வரையே குறிக்கின்றன என்று தெளியலாம். வட மொழியில் உள்ள புராண நூல்களைக் கற்றறிந்த உரையாசிரியர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழு திய காலத்து வடமொழிக் கதைகளை உளத்தில் கொண்டு உரையெழுதி விட்டனர். என்றும் அழியா தவன் என்று கருதப்பட்ட இறைவன் பிறந்து இறக் கும்தொழில்களைக் கொண்ட திருமால் என்று கருதப் பட்டு விட்டான். உண்மைப் பற்றில்லார் அறி வினுக்கு எட்டாதவன் எனப்பட்ட இறைவன் முருகனாகி, சிவனின் புதல்வனாகி, இளையோனாகி, கணபதியின் தம்பியாகி விட்டான். யாவர்க்கும் தலைவனாக விரும்பப்படும் இறைவன் (வேந்தன்) .