பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தொல்காப்பிய ஆராய்ச்சி தேவர்கட்கு அரசனாம் இந்திரனாகி விட்டான். பெருநிற வண்ணனா ய் எல்லா நிறங்களுக்கும் காரணனாகிய இறைவன் (வருணன்) ஆரிய நூல்களில் கூறப்படும் மழைக் கடவுளாம் வருணன் எனப் பட்டான். உரையாசிரியர்களின் உரைப் பொருள் மாற்றம் உண்மையை உணரமுடியாமல் செய்து விட்டது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலக இயல்பினை விளக்க வந்த ஆசிரியர் பிற நாட்டு மொழியியல்பை உரைத்தனர் என்றல் அறிவொடுபட்ட உரையாகாதன்றோ? ஆகவே இந் நூற்பாவில் கூறப்படும் கடவுட் கொள்கை தமிழர்க்கே உரியதாகும். இன்னொரு முதற்பொருளாம் பொழுது பற்றியும் விளக்குகின்றார். பொழுது, பெரும் பொழுது எனவும், சிறு பொழுதெனவும் பிரிக்கப்பட்டிருந்தது. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பன பெரும் பொழுது. மாலை, யாமம், விடியல்,காலை, நண்பகல், ஏற்பாடு என்பன சிறுபொழுது. சிறுபொழுது ஆறு என்பாரும் உளர்; ஐந்து என்பாரும் உளர். ஆறு. என்றலே பொருத்த முடைத்து. நாழிகை, நாள், வாரம், திங்கள், பருவம், ஆண்டு முதலிய பிரிவுகளைத் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழர்கள் அறிந்திருந்தனர். இன்னின்ன திணைக்கு இன்னின்ன பொழுது சிறந்ததாகும் என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். முல்லைக்குக் காரும் மாலையும் சிறந்தனவாம். குறிஞ்சிக்குக் கூதிரும் யாமமும் சிறந்தனவாம். ஏன் சிறந்தன என்பது பற்றி நச்சினார்க்கினியர் னியதோர் விளக்கம் தருகின்றார்.