பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 137 கார் காலம் என்பது ஆவணியும் புரட்டாசியுமாம். ஒரு காலத்தில் ஆண்டுத் தொடக்கம் ஆவணி முதலாகக் கொள்ளப்பட்டது என்பர். இன்றும் மலையாள நாட்டில் ஆண்டுத் தொடக்கம் ஆவணி யிலிருந்தே கொள்ளப்படுகின்றது. இப்பொழுது சித்திரை முதலாக ஆண்டுத் தொடக்கம் கொள்கின் றோம். இம்மாற்றம் என்று உண்டாயிற்று என்பது ஆராய்ந்து காண்டற்குரியது. ஆவணியும் புரட்டாசி யும் கார்காலம் : ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர் காலம்: மார்கழியும் தையும் முன் பனிக்காலம்; மாசியும் பங்குனியும் பின் பனிக் காலம் : சித்திரை யும் வைகாசியும் இளவேனிற்காலம் ; ஆனியும் ஆடியும் முதுவேனிற் காலம். இவ்வாறு காலங்கள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டு வந்தன. பன்னிரண்டு மாதங்களும் தமிழ்ப் பெயர்களே. இவை தொல் காப்பியர் காலத்திலேயே ஆட்சியிலிருந்தன. நாழிகை வட்டிலால் நாழிகை யறிந்து நாட்கட னாற்றினர் என்பது பண்டைய இலக்கியங்களால் நன்கு அறியலாகும். கருப் பொருள் என்பன முதற்பொருளாம். நிலத் திலும், காலத்திலும் தோன்றுவன. மக்களுக்குப் பயன்படுவன. அக்கருப்பொருளாவன தெய்வம், உணவு, மா, மரம், புள், பறை, தொழில், யாழ் முதலியன 44 'தெய்வம், உணாவே, மா, மரம். புள், பறை, செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப. ' உலகத்திற்கு முதற் பொருளாயுள்ள கடவுளை' முதற் பொருள் என்னாது கருப்பொருள் என்றதன்