பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 என்னும் குறட்பாவில் மற்றையவர் என்பதே பன்மைச் சொல்லாக நிற்க அமையும். ஆயினும் மற்றையவர்கள்' எனக் 'கள்' ஈறும் சேர்க்கப்பட்டுள்ளது. தொல் காப்பியர் திருவள்ளுவர் காலத்துக்குப் பிற்பட்டவரா யிருப்பின் 'கள்' ஈறு. "கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி யுடைய பலவறி சொற்கே" என்று அஃறிணைப் பன்மையை மட்டும் உணர்த்தும் என்று கூறி இரார் அன்றோ? இலக்கியப் புலவர் இலக்கணக் கூற்றைக் கடந்து மொழி வழக்கைத் தழுவும் உரிமை யுடையார். ஆனால் இலக்கணப் புலவர் இலக்கிய உண்மையை விடுத்து இலக்கணம் கூறும் இயல்பினர் அல்லர். ஆதலின் தொல்காப்பியர் திருவள்ளுவர்க்கு முற்பட்டவர் என்று தெள்ளிதில் அறியலாம் தொல்காப்பியர் உவமஉருபுகளைத் தொகுத்துக் கூறியுள்ள பட்டியலில் அற்று, அனைய என்பவைகளும் அவற்றின் அடியாகப் பிறந்தவைகளும் சேர்க்கப்பட்டில. திருவள்ளுவர் அற்று' என்பதைப் பதினோறு இடங்களி லும்,அனைய என்பதைப் பதினாறு இடங்களிலும் பயன் படுத்தியுள்ளார். தொல்காப்பியர், திருவள்ளுவருக்குப் பின் வாழ்ந்தவராயிருப்பின் திருக்குறளில் பயின்றுள்ள உவம உருபுகளைக் கூறாது விட்டுவிடுவரா? ஆகவே தொல்காப்பியர். திருவள்ளுவர்க்குக் காலத்தால் முற்பட்டவர் என்பது உறுதியான உண்மையென்று உணரலாகும்.] திருவள்ளுவர் தமது நூலில் 'ஆல்' என்பதனை மூன்றாம் வேற்றுமை உருபாக ஐம்பத்தேழு இடங்களில் பயன்படுத்தியுள்ளார். தொல்காப்பியர், மூன்றாம் வேற்றுமை யுருபாக 'ஆன்' என்பதனைக் கூறினாரே