பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 139 என்று கொண்டிருந்தனர் என்பதற்கும் இது சான்றாகும். உரிப் பொருள் என்பன இருத்தல், இரங்கல், ஊடல் ஆம். புணர்தல், பிரிதல், “ புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை தேரும் காலைத் திணைக்கு உரிப் பொருளே. இவை எல்லாத் திணைகளிலும், நிகழுமென்றாலும் குறிஞ்சிக்குப் புணர்தலும், பாலைக்குப் பிரிவும், முல்லைக்கு இருத்தலும், நெய்தலுக்கு இரங்கலும், மருதத்திற்கு ஊடலும், சிறந்தனவென்று கொள் ளுதல் வேண்டும். புலவர்கள் பாடல் இயற்றுங்கால் முதல், கரு, உரி என்ற மூன்றும் அவ்வத்திணைக் குரியனவாய் இருத்தல் வேண்டும். இவை மூன்றும் பொருந்தப் பாடப் பெற்றனவே சங்க இலக்கியங்கள். குறிஞ்சி என்ற திணைப் பெயரோடு பல பாடல்களிருப்பினும் ஒவ்வொரு பாடலும் தனித்தனி நலம் பொருந்தியன வாய் இலக்கிய இன்பம் ஊட்டுவதில் இணையற்று விளங்கக் காணலாம். கருப்பொருள்கள் மயங்கி வரப் பாடுதலும் உண்டு. ஒரு நிலத்துக்குரியன இன்னொரு நிலத்தினும் தோன்றுதல் இயல்பு. தாமரை மருதத் துக் குரியது. மலையின் சுனையில் காணலும் கூடும். மயில் குறிஞ்சிக்கு உரியது. முல்லைக்குரிய காட்டில் வாழலும் கூடும். ஆதலின் ஆசிரியர் தொல்காப்பியர். * எந்நில மருங்கின் பூவும் புள்ளும் அங்கிலம் பொழுதொடு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயத்த வாகும் " என்று கூறிப் போந்தார்.