பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 141 பட்டு வாழ்வாரே காதல் வாழ்விலும் சிறப்புற முடியும். ஆயினும் ஏனையோர்க்கும் காதல் வாழ்வு விலக்கப்பட்டதன்று. பிறர்க்கு அடிமைத் தொண்டு புரிவோரும் குற்றேவல் செய்வாரும் அன்றும் இருந் தனர். அவர்களையும் தலை மக்களாகக் கொண்டு பாடல் இயற்றலாம். அவ்வாறு இயற்றுங்கால் ஒத்த காதலுக்குரிய ஐந்திணையில் வைத்து இயற் றுதல் இயலாது. அதன் புறத்தே உள்ள கைக்கிளை பெருந்திணைகளில் வைத்துத் தான் இயற்றலாம். இவ்வாறு கூறுவதனால் இலக்கியம் உலகியலைத் தழுவித் தான் அமைய வேண்டும் என்பதில் எத்துணை உறுதிப் பாடுடையர் ஆசிரியர் என்று அறியலாம். அங்ஙனமாயின் அடிமைகளும் ஏவலர் களும் காதல் வாழ்வில் வெற்றியுறுதல் இலையோ எனின், ஆம் என்றே கூறுதல் வேண்டும். ஓரொரு கால் வெற்றி பெற்றாலும் பல இடர்ப்பாடுகளைக் கடந்தாக வேண்டும். கடந்தாலும் அமைதி வாழ்வு இராது. பணியாள் ஒருவன் அவன் தலைவரின் மகளைக் காதலிக்கலாம். அவள் அவனைப் பொருட் படுத்தாமலிருக்கலாம். அப்பொழுது கைக்கிளையாகி விடுகின்றது. காதலிக்குமவன் காதல் வெறி மிக்கு அவள் துயிலுங்கால் அவளையறியாமல் கூட முயல் லாம். அது பெருந்திணையாகி விடுகின்றது. ஒருகால் அவளும் அவனைக் காதலிப்பளேல் உடல் தோற்றம் கண்டு தான் காதலிக்கவேண்டும். உடல் தோற்றம் கெடின் காதலும் மறையத் தொடங்கும். அவளும் வெறுத்துத் தன் அறியாச் செயலுக்குப் பின்னர் வருந்துவாள். ஏவலர் காதலும் நிறைவேறாது என்பதற்கு ஒரு சான்று. அரசரின் கீழ்ப் பணிபுரிந்த உயர் அலுவ லாளர் ஒருவர் தாம் மணக்க விருக்கும் மங்கையுடன்