பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 தொல்காப்பிய ஆராய்ச்சி அரசரிடம் சென்று வாழ்த்துப் பெற நினைத்து அரச ரைக் கண்டார். அரசர் மணமக்களை வாழ்த்த நோக் கினார். நோக்கு மணமகள் பால் சென்று அவள் அழகில் பொருந்தி விட்டது. பருகிய நோக்கைப் பற்று விட்டகலச் செய்ய இயலவில்லை. மணமக னுக்கு வாழ்த்துக்கூறி வேறொரு பெண்ணைத் தேடிக் கொள்ளச் சொல்லிவிட்டார். வாழ்த்துப் பெறச் சென்ற மங்கை வாழ்க்கைத் தோழியாக வேண்டிய நிலைவந்துவிட்டது. இது எகிப்து நாட்டில் அண்மைக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். ஆகவே, 'அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரை இல புறத்து என்மனார் புலவர் "1 என்று ஆசிரியர் கூறுவது எவ்வளவு உலகியலோடு பொருந்தியது என்று அறியலாமன்றோ. பாடல்கள் இயற்றுவோர் யாப்பிலக்கணம் மட்டும் அறிந்தால் போதாது. நிலநூல், வானநூல், உயிர் நூல்,அறநூல், மெய்யறிவு நூல்,உழவு நூல்,கடவுள் நூல், மக்களின் நூல் முதலியன யாவும் கற்றறிந்து இருத்தல் வேண்டும். அவர்களே வழுவின்றி யாவரும் விரும்ப எக் காலத்தும் நிலைத்து நிற்குமாறு இலக் கியம் இயற்றுதல் இயலும். கற்பித்துக் கூறும் நாடக வழக்காயினும், கண்ணாற் காணும் உலகியல் வழக் காயினும் முற்றும் கற்றுத் துறை போய் புலவர்களே செம்மையுற இயற்றுதல் இயலும். தொல்காப்பி யர்க்கு முன்னும் பின்னும் வாழ்ந்த புலவர்களில் பலர் அன்ன மாட்சியினை உடையராய் ஆய்தொறும் 1.அடியோர் பாங்கினும் - அடிமைத் தொழில் செய்வோரிடத்தும்: வினை வலர் பாங்கினும் = பிறர் ஏவிய தொழிலைச் செய்தல் வல்லோரிடத்தும். புறத்து = நடுவண் ஐந்திணைப் புறத்து நின்ற கைக்கிளை பெருந்திணைகளுள், கடிவரையில் = தலை மக்களாகச் செய்யுட் செய்தல் நீக்கும் நிலை இல,