பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 151 . இம்மருதக் கலிப்பாடலின் வெளிப்படைப் பொருள் வருமாறு: பெருகுகின்ற நீரில் மலர்ந்த கருங்குவளையை நகரில் கொண்டு வந்து விற்க வருகின்றனர். வயலில் பூத்த அப்பூக்களோடு வண்டுகளும் சூழ்ந்து வருகின்றன. அவ்வண்டுகள் நகரத்தில் உள்ள உயர்ந்த அழகிய யானையின் மத நீரில் மொய்த்துண்டன பகற்பொழுதில்; இரவில் தலைவனுடன் கூடிய தலைவியின் தலையில் சூடப் பட்டிருந்த நறுமண முல்லை மலர்களில் பாய்ந்து நுகர்ந்தன. பின்னர் வேறு பூக்களை நினையாமல் தம் பழைய இருப்பிடத்தையும் மறந்துவிட்டன. உள்ளுறை பொருளாவது:-வீங்கு நீர் என்பது பரத்தையர் சேரியாகும். அதண்கண் மலர்ந்த நீல மலர்--கருங்குவளை-காமச் செவ்வி உடைய பரத்தைய ராவர். மலர்களை விற்பவர் பரத்தையரைத் தேரேற் றிக் கொண்டு வருபவர். அம்மலரைச் சூழ்ந்த வண்டு தலைவனாவான். யானை மத நீர் சேரிப்பரத் தையர் : இரவு முல்லை - இற்பரத்தை; இருப்பிடமாம். குளம்-தலைவனது வீடு; குளத்தின் மலர்-தலைவி. பழைய பாணர்கள் தேரேற்றிக்கொண்டு வந்த பரத் தையருடன் உவந்து, சேரிப்பரத்தையுடன் மகிழ்ந் திருந்து விட்டு, இற்பரத்தையுடன் இரவில் கூடி, தலைவியை மறந்து விட்டான் தலைவன் என்பதே இப்பாட்டின் உள்ளுறை பொருளாகும். பரத்தை யுடன் கூடிவந்த தலைவனுடன் ஊடல் கொள்ளும் தலைவி, தலைவன் நடத்தையைத் தான் அறிந் திருப்பதை மறை முகமாகக் கூறுகின்ற முறையில் அமைப்பது படிப்போர்க்கு இன்பச் சுவை நல்கும் பெற்றியது.