பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தொல்காப்பிய ஆராய்ச்சி இவ்வாறு உள்ளுறை உவமம் அமைத்து அகத் திணைப் பாடல்கள் அமைப்பது இலக்கியத்தின் சுவையைப் பெருக்கும். ஆதலின், ஆசிரியர் தொல் காப்பியர் அதனையும் இவ்வியலில் குறிப்பிட்டுள்ளார். இக்காலத்தில் அகப்பொருள் பற்றிய பாடல்கள் இயற்றுவாரும் அவற்றுள் உள்ளுறை உவமை பொருந்துமாறு செய்வாரும் இலரே என்று கூறி விடலாம். அகத்திணையின் இலக்கணத்தை அறிவித்த ஆசிரியர் புறத்திணையிலக்கணத்தை அடுத்து வரும் இயலில் கூறுகின்றார்.ஆயினும் அகம் பற்றிய களவு, கற்பு, பொருளியல்களை அறிந்து கொண்டு பின்னர் புறத்திணை பற்றி அறிவதும் பொருத்த மாகும். ஆ தலின் அடுத்து நாம் எடுத்துக் கொண்டது களவு பற்றியாகும்: களவு என்பது காதல்.