பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 153 2. காதல் இயல் மக்களினப் பெருக்கம் ஆடவரும் பெண்டிரும் கணவனும் மனைவியுமாய் இணைந்து வாழ்தலைச் சார்ந்தது. இயற்கை நெறியில் இருவரும் தனித்து வாழ்தல் இயலாது. தனித்து வாழ்ந்தால் வாழ்வின் பயன் முற்றுப்பெறாது. ஆணும் பெண்ணும் சேர்ந்து கணவனும் மனைவியுமாய் வாழ்வதற்குத் துணை புரிவதே காதல். திருமணங்கள் பல வகையால் நிகழும். நாட்டுக்கு நாடு,காலத்துக்குக் காலம் வேறுபடலாம். காதல் திருமணமே அனைத்தினும் சிறந்தது; உயர்ந்தது. காதல் திருமணத்தில்தான் சாதி மத மொழி நிறநிலை வேறுபாடுகள் இரா. ஆதலின் காதல் திருமணம் நிகழும் நிலையைக் கொண்டுள்ள மக்களினம் நாகரி கத்தில் உயர்ந்ததாகும். பண்பாட்டில் சிறந்த தாகும். தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் காதல் திருமணமே வழக்கில் இருந்துளது. வயது வந்த ஆணும் வயது வந்த பெண்ணும் தம்முள் நட்புக் கொண்டு ஒழுகிக் காதலித்தலைக் 'களவு' என்று அழைத்தனர். இருவரும் காதலித்து ஒழுகுதல், முதலில் பிறர் அறியாமல் நிகழ்தலின் அதனைக் களவு என்று கூறினர்.