பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 தொல்காப்பிய ஆராய்ச்சி (The Social Institutions of Ancient Indians-Pages 153-154) ஆரிய மாபாரதம் இயற்றப்பட்டகாலம் கி.மு. பத்தாம் நூற்றாண்டென்பர். கி.மு. ஏழாம் நூற் றாண்டினரான தொல்காப்பியர் தாம் அறிந்த வட காட்டு முறைகளுடன் தமிழ்நாட்டு மணமுறையை ஒப்பிட்டார். வடநாட்டு முறைகள் தமிழ்நாட்டில் அன்று இடம் பெறவுமில்லை. அவற்றைத் தழுவ வேண்டுமென்று தொல்காப்பியர் கூறவுமில்லை. தமிழ் நாட்டிலுள்ள காதல் முறையைக் குறிப்பிட்டு அம் முறைதான் இலக்கியத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்று விதித்துள்ளார். வாழ்வில் எப்படி யிருந்தாலும் இலக்கியத்தில் வடநாட்டு மணமுறை களைத் தழுவினால் என்ன? என்று வினவலாம். வாழ்க்கைதான் இலக்கியத்தின் அடிப்படையாக அமைதல் வேண்டும் என்று கருதிய தொல்காப்பியர் தமிழகக் காதல் முறையையே விரித்துச் சொல்லி இலக்கிய யாப்புக்கு வழி காட்டியுள்ளார். புதிதாக வந்துசேர்ந்த வடநாட்டவர் தமிழ்நாட்டு மணமுறையைக்கண்டு தம் நாட்டு மணமுறையோடு வேறுபட்டிருப்பதை அறிந்து காதல் மணத்தை எள்ளி நகையாடியிருக்கலாம். மக்கள் வாழ்வியலுக்கு இடையூறு பயக்கும் என்று கருதி அதனை அகற்றித் தம் நாட்டு முறையைத் தழுவச் செய்ய முயன்றிருக் கலாம். அதனைக் கண்ணுற்ற தொல்காப்பியர் தமிழ் நாட்டுமுறை உலகில் இல்லாத ஒன்று அன்று.வடவர் இலக்கியங்களில் போற்றும் கந்தருவ முறைதான் என்று எடுத்துக் காட்டுவதற்காக இவ்வாறு கூறி யிருக்கலாம். "துறையமை நல்யாழ்த்துணைமையோர் இயல்பே" என்று கூறுவதன் பொருளை ஆராய்ந்தால் இக்கருத்து வெளிப்படும். இலக்கியத்துறைகளில் அமைந்துள்ள நல்ல யாழினையுடையோராம் கந்தரு