பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தொல்காப்பிய ஆராய்ச்சி, எதிர்ப்படும். அங்ஙனம் எவ்வாற்றானும் ஒவ்வாது தலைவன் உயர்ந்தோனாயினும் கடியப்படா என்ற வாறு. ஒரே நிலத்தைச் சேர்ந்த தலைவனும் தலைவியுமோ வெவ்வேறு நிலத்தைச் சேர்ந்த தலைவனும் தலைவி யுமோ ஊழின் துணையால் சந்திப்பர் என்றார். காதல் தோன்றுவது ஊழினால்தான் என்று நம்புவோர் மேலை நாடுகளிலும் உளர். தம் வாழ்வில் நிகழும் பல நி கழ்ச்சிகளுக்கு ஊழே (விதியே) காரணம் என்று நினைப்போரும் தம் மக்கள் காதல் திருமணம் செய்துகொள்ள ஒருப்படார். எல்லாம் விதியின் செயல் என்று நினைப்போர் இக்காதல் உண்டாவதும் விதியின் செயலால் என்று கருதினால் உண்டாகும் இழுக்கொன்றுமில்லை. ஆனால் சாதி மதம் முதலிய வேறுபாடுகள் நிலைத்திருக்க வேண்டு மென்று கருதுபவர்கள் காதல் திருமணத்தால் அவை அழிந்து விடுமே என்று அஞ்சியே காதல் திருமணத் பண்டைய ஆரியர்களும் வர்ணம் ஆசிரமம் முதலியன அழிந்து விடுமென்று அஞ்சியே காதல் திருமணத்தைக் கடிந்தனர். சாதி மதநிறவேறுபாடுகளைக் கொள்ளாத தொல்காப்பியர் காலத் தமிழினம் காதல்மணத்தைப் போற்றியது. இலக்கியத்திலும் காதல் மணமே காணப்பெறுதல் வேண்டுமென்று கருதினர் ஆசிரியர். தை வெறுக்கின்றனர். இந்நூற்பாவுக்கு இன்னொரு பொருளும் கொள்ள லாம். அது வருமாறு :- உலகத்தில் ஆண்பால் பெண்பால் என இரு பிரிவுகள் உள்ளன. ஆணை ஆணும், பெண்ணைப் பெண்ணும் காதலித்தல் இயலாது. ஆணும் பெண்ணும் என்ற வேறுபட்ட இருபாலினரும் தம்முள் காதலித்தல் கூடும். ஆணும் பெண்ணும் இளமை தொட்டு ஒழுக்கக்