பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பிற்காலப் புலவர்கள் தம் முன்னோரின் வரலாறுகள் கிடைக்கப்பெறாத குறையைத் தம் கற்பனைத் திறனால் நிறைவு செய்யத் தொடங்கினர். இல்லாத வரலாற் றினைப் பொல்லாத முறையில் புனைந்து கூறி மகிழ்ந்தனர். ஒல்காப் பெரும் புகழ் தொல்காப்பியரும் உலகம் புகழும் பொருளுரை புகன்ற பொய்யில் புலவரும், பிற்காலப் புலவர்களின் நாவில், குயவனார் கைப்பட்ட குழைமண் ஆகிவிட்டனர். கற்பனை சென்ற வாறு கதைகளைக் கற்பித்தனர். காலப்போக்கில் கற்பனைக் கதைகளே உண்மை வரலாறுகளாக உருக் கொண்டன. காலவரையறை எனும் கரை முயல்வோரைக் கலங்க வைக்கின்றன; கண்ணிழக்கச் செய்கின்றன. காண தமிழ்த் தொல்காப்பியரை ஆரியச் சமதக்கினியின் புதல்வராக்கினர். அகத்தியரின் மாணவர் எனக் கூறி அகம் மகிழ்ந்தனர். இக்கூற்றுகளால் தொல்காப்பியர் இராமன் காலத்தவர் என்று கூறுவதற்கு இடமேற்பட்டு விட்டது. பரசுராமர் "சமதக்கினி, பரசுராமர் தந்தை. இராமர் காலத்தவர்; ஆகவே தொல்காப்பியரும் இராமர் காலத்தவர். தொல்காப்பியர், அகத்தியர் மாணவர்; அகத்தியர் இராமர் காலத்தவர்; ஆகவே தொல்காப்பியரும் இராமர் காலத்தவர். இராமர் காலம் கி.மு.2000க்கு முற்பட்டது. தொல்காப்பியர் காலமும் கி.மு. இரண்டாயிரத்துக்கு முற்பட்டதாகும்." இவ்வாறெல்லாம் கூறுவதற்குக் காரணம் தொல் காப்பியரைப்பற்றி வழங்கும் கதைகளே. தொல் காப்பியர், சமதக்கினி முனிவரின் புதல்வர் என்பதும். அகத்திய முனிவரின் மாணவர் என்பதும் சான்று களுடன் நிறுவமுடியாத கற்பனையாம்."அகத்தியர்