பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" 160 தொல்காப்பிய ஆராய்ச்சி " பிறப்பே. குடிமை. ஆண்மை, ஆண்டொடு உருவு, நிறுத்த காம வாயில் நிறையே, அருளே, உணர்வொடு திரு என முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. ' பிறப்பு, ஒழுக்கம், ஆண்மை, வயது, வடிவம், காதல் உணர்ச்சி,நிறை,அருள்,அறிவுடைமை, திரு எனும் பத்திலும் இருவரும் ஒத்திருக்க வேண்டும். பிறப்பு என்பது நல்ல குடியில் பிறத்தலாகும். குடி வேறு சாதி வேறு. அன்று சாதி கிடையாது. ஒவ்வொரு குடிக்கு ஒவ்வொரு பண்பு இருக்கலாம். அக்குடிப் பிறப்பால் ஒழுக்கம் உருவாகும். ஆதலின் அதனை அடுத்துக் குடிமையையும் வைத்தார். ஒழுக்கமுடைமை குடிமை" என்பது வள்ளுவர் வாய்மொழி. வள்ளுவர் காலத்திலும் ஒழுக்கம் உடைமையே நல்ல குடிப்பிறப்பின் அடையாளமாகக் கருதப்பட்டு வந்துள்ளது. 'ஆண்மை' ஆணுக்கு உரியதன்றோ? பெண்ணுக்கு எவ்வாறு பொருந்தும் எனக் கருதலாம். வலிமை இரு சாரார்க்கும் வேண்டியதொன்று. உள்ள வலிமை, உடல் வலிமை, சூழ்நிலைக்கு ஏற்பத் தம்மையும் பிறரையும் ஆளும் தன்மை இருந்தாலன்றி உலக வாழ்வுப் போரில் வெற்றிபெற இயலாது. ஆகவே ஆண்மையிலும் இருசாராரும் ஒத்திருத்தல் வேண்டும். காதலின்பத் துக்கும் ஒத்த ஆண்மையினராய் இருத்தலே சிறப்புடைத்து. அங்ஙனம் இன்மையால் திருமணங் களில் சில முறிவுக்குரித்தாகி இல்லற வாழ்வு துன்பக் களனாக மாறிவிடுகின்றது. ஆண்டில் ஒத்திருத்தல் என்பது பருவ வளர்ச்சியில் ஆணுக்குரிய ஆண்டும் பெண்ணுக்குரிய ஆண்டும் எனக் கொள்ளலாம். அக்காலத்தில் ஆணுக்குப் பதினாறு ஆண்டிலும் பெண்ணுக்குப் பன்னிரண்டு ஆண்டிலும் பருவ