பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 165 காதலுணர்வை அதன் செவ்வியறிந்தே தலைப்படுதல் வேண்டும். அன்றியும் தம் கருத்தை வெளிப்படையாகச் சொல்வதற்குத் தடையாய ஆண் பெண் இயல்புகளும் உள. ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமநிலையில் வாழவேண்டுமென்று எவ்வளவுதான் முழக்கமிட்டா லும் ஆண். ஆண்தான்: பெண் பெண்தான். இருவரும் ஓரியல்பினர் ஆய்விடுதல் முடியாது. "பட்டங்கள் பெறுவோம், சட்டங்கள் செய்வோம், பாரில் எமக்கு ஈடில்லை" என்று கூறும் பட்டம் பெற்று சட்டம் இயற்றும் புதுமைப் பெண்கள் கூட தன் பெண் இயல்பை மாற்றிவிட இயலவில்லை. ஆசிரியர் தொல்காப்பியர் இருபாலாரின் இரு வேறுபட்ட இயல்புகளை எடுத்துக்கூறி, அவை காரணமாகவே அவர்தம் காதல் விருப்பத்தைக் குறிப்பாகவே வெளிப்படுத்துவர் என்றனர். ஆண்பாலுக்குரிய இயல்புகள் உரனும் ஆம்.ஆசிரியர். 4 பெருமையும்

  • பெருமையும் உரனும் ஆடூஉ மேன

என்பர். பெருமை' என்பது அறிவும், ஆற்றலும், புகழும், கொடையும், ஆராய்தலும், பண்பும், நண்பும், பழி பாவம் அஞ்சுதலும் முதலியனவாய் மேற்படும் பெருமைப் பகுதியாகும் என்பர் நச்சினார்க்கினியர். 'உரன்' என்பது கடைப்பிடியும். நிறையும் கலங்காது துணிதலும் முதலிய வலியின் பகுதியும் என்பர் அவர். ஆதலின் இவ்வியல்புகளை யுடைய தலைவன் தலைவியின் குறிப்புணராது தன் வேட்கையை உரையால் புலப்படுத்த முற்படான். முற்படின் அவன் பெருமையும் உரனும் என்னாம் கொல்?