பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தொல்காப்பிய ஆராய்ச்சி பெண் ஒருத்தி எவ்வளவுதான் கற்றுப் பட்டம் பல பெற்றுப் பதவிகளில் அமர்ந்து திறம்பட நடத்தினும் காதலில் முந்திக்கொள்ளுதல் பெண்ணியல்பன்று. ஆள்வினைப் பகுதிகளில் ஆண்களோடு சமமாகப் போட்டியிட்டு ஆண்களி னும் மேம்பட்டவராக விளங்கும் அரசியரேயாயினும் காதலில் பெண்ணியல்பைக் கடத்தல் இயலாது. பெண்ணியல்புகள் யாவை? அச்சம், நாண், மடன் என்பனவாம். " அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த நிச்சமும் பெண்பாற் குரிய என்ப.” காதலில் தலைப்படும்போது ஆண்களைவிடப் பெண்களே அஞ்சுதற்குரியவர்கள். ஆண்களுக்குக் காதல் முறிவு ஏற்பட்டால் வேறு பெண்களைக் காதலித்துக் கொள்ளலாம். ஆனால் பெண்கள் நிலையோ வேறுபட்டது. அவர்கள் வாழ்வில் ஒருமுறைதான் காதலித்தல் கூடும். காதலில் முறிவு ஏற்படின் வாழ்வே முறிந்துவிடும். ஆதலின் பின் விளைவையறியாது என்ன நிகழுமோ என்று அஞ்சி அஞ்சிக் காதல் துறையில் நுழைய வேண்டியவ ராவார். 'நாண்' பெண்களுக்கு இயல்பாக உள்ள இனிய சாயல் பண்பு. நங்கையரைக் காட்டி. இதுதான் நாண் என்று அவரிடம் தோன்றும் இயல்பால் அறிவித்தல் கூடுமேயன்றி சொற்களால் சொல்ல இயலாது. நச்சினார்க்கினியர் நாண் என்பதற்குக் காமக்குறிப்பு நிகழ்ந்த வழிப் படுவதோர் உள்ள ஒடுக்கம்" என்றார். காதற் குறிப்பு நிகழ்வதற்கு முன்பும் கணவன் ஒருவனைத் தேடிய பின்பும் இந்நாண் என்னும் நல்லியல்பு நங்கையர்க்கு உரித் தாக இருத்தலின் நச்சினார்க்கினியர் கூறுவது பொருந்தாது. மடன்' என்பது அறிந்தும்