பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 தொல்காப்பிய ஆராய்ச்சி காணப்பெறும் நிலையை அடைவர். தாம் ஆற்ற வேண்டிய செயல்களையும் கடமைகளையும் மறப்பர். பிரிவுத் துன்பம் மேலிட்டு மயங்கிக் கிடப்பர். தம் காதலரை அடைவதற்கு முயன்று முடியாவிடின் இறப்போம் என்று சாக்காடு மேலிட்டுக் கூறுவர். தலைவன் தான் கொண்டுள்ள புதிய நிலையைத் தன் தோழனுக்கு உரைப்பான். உரையாது இருப்பினும் தலைவனிடத்துக் கண்ட மாற்றங்களால் தோழன் அறிந்து கொள்வான். அவ்வாறு அறிந்த தோழன் தன் நண்பன் தான் விரும்பிய காதலியை மீண்டும் காண வேண்டுவன செய்வான். தோழனைக் கண்டு அவன் கூறும் ஆறுதலையும் துணை மொழிகளை யும் பெறும் நிலைமைக்குப் பாங்கற் கூட்டம்' என்பர். தலைவி தன் தோழியின் முயற்சியால் ஆறுதல் அடைந்து மீண்டும் தலைவனைக் காணும் நிலை பெறுதலுக்குத் தோழியிற் கூட்டம்' என்பர். தலைவனும் தலைவியும் பகலிலும் இரவிலும் சந்திப்பர். பகலில் சந்திக்குமிடத்தைப் 'பகற்குறி' என்றும், இரவிற் சந்திக்குமிடத்தை 'இரவுக்குறி என்றும் அழைப்பர். பகற்குறி நிகழும் இடம் வீட்டுக்கு வெளியே அமையும். இரவுக்குறி நிகழு மிடம் வீட்டின் பகுதியிலேயும் வீட்டில் உள்ளோர் சொல்லைக் கேட்கும் தூரத்திலும் அமையும்.இவ் வாறு சந்திக்கவரும் இடங்களில் சந்திப்பு நிகழாமல் இருவரும் ஏமாற்றம் அடைதலும் இயல்பே. எவருக்கும் தெரியாமல் மறைந்து ஒழுகிவரும் இவ்வறவொழுக்கம் பையப்பைய வெளிப்படத் தொடங்கும். தோழிக்குத் தலைவி குறிப்பாகவேனும் அறிவியாது இருந்தால், தலைவியின் தோற்றத்திலும் செயல் முறைகளிலும் காணப்படும் மாறுபாடுகளைக்