பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 169 கண்டு, இம்மாறுபாடுகளுக்குக் காரணம் யாதோ என்று எண்ணத் தொடங்குவாள். எண்ணத் தொடங்கிய பின்னர் ஏற்படும் சில குறிப்புகளால் தன் தோழியாம் தலைவிக்குக் காதல் நோய் உண்டாகி யிருப்பதை அறிவாள். அறிந்திருக்கும் நிலையில் தலைவன் தலைவியின் கூட்டத்தை விரும்பி அதனை அடைவதற்குத் துணைசெய்யக் கூடியவள் அவள் இன்னுயிர்த் தோழியே என்று அறிந்து அவளிடம் சென்று தன் குறையைக் கூறி வேண்டுவான். தலைவியும் தோழியும் சேர்ந்திருக்கும் காலத்தில் தலைவன் வந்துவிடுதலும் உண்டு. ஆகவே எங்ஙன் மாயினும் தோழிக்கு இந்நிகழ்ச்சி - தலைவிக்கும் தலைவனுக்கும் ஏற்பட்டுள்ள தொடர்பு - வெளிப் பட்டுவிடும் தோழி உய்த்துணர்தலால் அறிந்துள்ள ஒன்று உறுதிப்பட்டு விடுதலை 'மதியுடம்படுத்தல்' என்பர். தோழியால் செவிலியும், செவிலியால் பெற்ற தாயும், தாயால் தந்தையும் தலைவியின் காதல் பற்றி அறிவர். தலைவி தன் காதலைத் தன் காதலனிடமும் உரை யால் வெளிப்படுத்துதல் அவள் நாண் ஒழுக்கத்திற்கு ஏற்றது அன்று. ஆனால் அவள் காதல் நிறைவேறாத வகையில் செயல்கள் நிகழத் தொடங்குமேல் நாண் பெரிதென வாளா இருந்து விடமாட்டாள். உயிரை விட நாண் சிறந்ததுதான். ஆனால் நாணத்தைவிட கற்புச் சிறந்தது. காதலித்த ஒருவனைக் கடிமணம் புரிதலே கற்புடைமைக்கு அழகு. அதற்கு இடையூறு நிகழும்போல் தோன்றின் உயிரினும் சிறந்த நாணத்தை விடுத்து எல்லாவற்றினும் சிறந்த கற் பைக்காக்க காதலன் இருப்பிடம் நாடிச் செல்லினும்