பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 தொல்காப்பிய ஆராய்ச்சி" இழுக்கின்று. வாய்விட்டுத் தன் காதலைக் கூறி வெளிப் படுத்தினும் பெண்மை நெறிக்கு மாறு பட்டதன்று. "உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று ” என தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு காமக் கிழவன் உள்வழிப் படினும் தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும் ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே. = பொருள்: உயிரினும் உயிரைக்காட்டிலும், நாண் சிறந் தன்று = மகளிர்க்கு நாண் சிறந்தது, நாணினும் = நாணத்தைக் காட்டிலும், செயிர்தீர் குற்றம் நீங்கிய, காட்சி அறிவால் மதிக்கத்தக்க, கற்பு - கற்பானது, சிறந்தன்று சிறந்தது என. தொல்லோர் = முன்னுள்ள பெரியோர், கிளவி = கூறிய மொழி யினை, புல்லிய நெஞ்சமொடு ஏற்றுக்கொண்ட உள்ளத்தோடு, காமக்கிழவன் காதலுக்குரிய தலைவன், உள் வழிப்படினும் இருக்குமிடம் தேடி அடையினும், தாவில் - என்ன நிகழினும் பொறுத்திருப்போம் என்ற மனவலியில்லாத, நன்மொழி =தனக் கும் பிறர்க்கும் நன்மை விளைக்கும் மொழியினை, கிளப்பினும் கூறினும். ஆவகை பிறவும் - அக்கூற்றுக்களிலே தோன்றுகின்ற பிற உரைகளும், தோன்று மன் பொருளே நிலையாகத் தோன் றும் அகப்பொருளே. தலைவனும் தலைவியும் நட்புப்பூண்டு ஒழுகி வருவது எவ்வளவுதான் மறைக்கப்பட்டாலும் நாள டைவில் சிறிது சிறிதாக வெளிப்படத்தான் செய்யும். முதலில் சிலர் அறிவர்; நாளாக, நாளாகப் பலர் அறிவர். சிலரே அறிந்துள்ள நிலையை 'அம்பல்' என்றும், பலர் அறிந்துள்ள நிலையை ' அலர் என்றும் கூறுதல் மரபு. இவ்வம்பலும் அலரும் களவை வெளிப்படச் செய்து விடும். இவ்வாறு வெளிப்படுவதற்குக் காரணமாய் இருப்பவன் தலைவனே. தலைவன் அடிக்கடி தலைவியிடம் வருதலினாலும் தன் காதலைப்