பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 தொல்காப்பிய ஆராய்ச்சி களவு வெளிப்பட்டுவிடின் கற்பு நிலையை எய்து தல் வேண்டும். அஃதாவது இருவர்க்கும் திருமணம் நிகழ்தல் வேண்டும். திருமணம் நிகழவில்லையேல் இருவரும் உயிர் வாழார். "கரணம் தப்பின் மரணம்" என்ற பழமொழி இதனால் எழுந்ததே. கரணம் என்றால் மணச்சடங்கு; மணச்சடங்கு நிகழும் நிலை இல்லையேல் காதலர் இருவரும் உயிர் வாழார்என்ப தாம். அதனாலேயே கந்தருவம் கற்பின்றி அமையும்; களவு கற்பின்றி அமையாது என நச்சினார்க்கினியர் கூறியதும் ஆகும். இக்கற்பு பற்றி அடுத்த இயலில் ஆராய்வோம்.