பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 173 3. கற்பு இயல் கற்பு என்பது பெண்களுக்குரிய தனிமைப்பண்பு என்று இன்று கருதப்படுகின்றது. தான் மணந்து கொண்ட ஆடவன் ஒருவனையன்றி வேறு ஒருவனை உள்ளத்தாலும் விரும்பாத இயல்புதான் கற்பாகும் என்பர். எங்கோ பிறந்த ஆடவனும் எங்கோ பிறந்த பெண்ணும் கணவனும் மனைவியுமாக வாழ்வதற்கு உள்ளம் ஒன்றிக் கற்பித்துக் கொள்ளுதலினால் கற்பு எனப்பட்டது. இவ்வாறு கற்பித்துக்கொண்டு ஒழுகுகின்றவர்கள் வேறொருவரைக் காதலிக்கத் தொடங்கினால் இக்கற்பு நிலைக்கு இழுக்கு என்று கருதினர். ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த கொள்கைவழி வாழும் இக்கருத்தில் இக்கற்பு கண வன் மனைவி இருசாரர்க்கும் இருக்கவேண்டிய இயல் புப் பண்பாகும். பருவம் உற்ற ஆடவன் பருவம் உற்ற பெண்ணைக் கூடி வாழத் தலைப்படுங்கால் இக் கற்புநிலை மேற்கொள்ளப்பட வேண்டியதொன்று. ஓர் ஆடவன் பல பெண்களை மணக்கும் உரிமை யுள்ள காலத்தில் இக்கற்பு ஆடவனுக்கு வேண்டிய தின்று. ஒரு பெண் பல ஆடவர்களை மணக்கும் உரிமையுள்ள நாட்டில் இக்கற்பும் பெண்ணிற்கு வேண்டியதின்று. சட்டப்படி ஒருவன் ஒருத்தியைத் தான் மணக்கலாம் என்றாலும் ஒருவன் - ஒருத்தியாக அமைந்து வாழ்கின்றவர்கள் உலகெங்கணும் மிகச்