பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 தொல்காப்பிய ஆராய்ச்சி

  • கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” (கிழவன் - உரியோன், தலைவன். கிழத்தி - உரியோள், தலைவி.) தலைவன் தலைவியைக் கொள்ளுவதற்குரிய முறை மைப்படி கொடுப்பதற்குரியவர் கொடுப்பக் கரணத் துடன் பெற்றுக்கொள்வதாகும். இதுவே கற்பெனப் படும். 'கரணம்' என்பதற்கு வேள்விச் சடங்கு என்று பொருள் கூறுகின்றார் நச்சினார்க்கினியர். வேள்விச் சடங்கு என்பது நெருப்புக் கடவுள் சான்றாகப் புரோ கிதர் முன்நின்று நடத்தும் முறையைக் குறிப்பீடு மானால் தொல்காப்பியர் காலத் தமிழர்க்குப் பொருந் தாதாகும். பின்னுள்ள நூற்பாக்களுக்கும் வட மொழி நூல்களைத் தழுவியே உரை கூறிச் செல்கின் றார். ஆதலின் இங்கு வேள்விச் சடங்கு என்பது வட மொழி நூல்களில் சொல்லப்பட்டுள்ள சடங்கு களையே குறிப்பிடுகின்றார் என்று கருதுதல் தவ றுடைத்தன்று. ஆயினும் கரணத்திற்குச் சான்றாக அகநாநூற்றுப்பாடல் (86) ஒன்றில் வருவதை மேற் கோளாகக் காட்டுகின்றார். அப்பாடலில் வரும் திருமண முறையாவது:- கோள் கால் நீங்கிய நிறைமதி நன்னாள். விடியற் காலையிலிருந்தே மண வினைக்குரிய ஏற்பாடுகள் தொடங்கப் பெறுகின்றன. வீட்டின்முன் பெரிய பந்தர் இடப்பட்டுள்ளது. புது மணல் பரப்பப் பட்டுள்ளது. மாலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. உழுந்துக் களியும் பெருஞ்சோறும் வருவோர்க்கு வழங்க நிறைய உள்ளன. திருமண வீட்டில் ஒரே ஆரவாரம். புதிய