பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 177 குடத்தினை உச்சியிலே கொண்டுள்ள வயது முதிர்ந்த பெண்கள் வரிசையாக நிற்கின்றனர். குழந்தைகளைப் பெற்றவராய்க் கணவனோடு வாழக்கூடிய பெண்கள் நால்வர் வருகின்றனர். குடங்களைப் பெற்றுத் தண் ணீரைக்கொண்டு மணமகளை முழுக்காட்டுகின்றனர். அத்தண்ணீரில் நெல்லும் மலரும் இடப்பட்டுள்ளன. அத்தண்ணீரைத் தலையில் ஊற்றுங்கால், "கற்பி னின்றும் தவறாது, நல்ல பல செயல்களில் கணவ னுக்கு உதவியாய் இருந்து அவன் விரும்பும் இணை யாக (சோடியாக) இருப்பாயாக" என்று கூறுகின் றனர். இதுவே திருமணச் சடங்காம். பின்னர் பேராரவாரத்துடன் வீட்டிற்குள் வருகின்றனர். "பெருமை மிக்க இல்லாள் ஆவாய்" எனக் கூறிச் சுற்றத்தார் தலைவனிடம் தலைவியைக் கொடுக்கின் றனர். அன்றிரவே இருவரும் ஒரு வீட்டில் ஒன்றாகக் கூடுகின்றனர். மணமகள் புதிய ஆடையால் தன்னை மூடிக்கொண்டு ஓரிடத்தில் படுத்துக் கிடக்கின்றனள். தலைவன் அவளைக் கூடும் விருப்போடு அவள் முகத்தை, மூடப்பட்ட ஆடையிலிருந்து வெளிப் படுத்துகிறான். அவள் அஞ்சியவளாய் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கின்றாள். "உன் உள்ளத்தில் உள்ளதை அஞ்சாது கூறுவாயாக' என்று தலைவன் உரைக்கின்றான். அவளுக்குப் பின்னால் இருந்து அன் போடு அவன் வினாவியவுடன் அவள் அகமகிழ்ச்சி உடையளாய் நாணத்தால் தலைவணங்கி இருக் கின்றாள். இக்காட்சி அக்காலத்து மணமுறையை ஓரளவு நமக்கு விளக்குகின்றது. இங்கு நெருப்போ வேள்வி யாசானோ (புரோகிதனே) இல்லை. கொடுப்பதற் குரியவராய் இருந்தவர்கள் வாழ்வரசிகளே. (கணவ னோடு வாழ்பவர்கள் கணவனை இழந்தவரோ மண மாகாதவரோ அல்லர்). 12-1454 -