பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 'கரணம்' தொல்காப்பிய ஆராய்ச்சி என்ற சொல்லுக்கு இன்னொரு பொருளும் கொள்ளலாம். இக்காலத்துங் கரணம் என்று சொல்லப்படுபவர்கள் ஊர்க்கணக்கு எழுதும் கணக்கப்பிள்ளைகள் ஆவார். கரணம். கணக்கு எழுதுவோரைக் குறிப்பதால், எழுது தலையும் குறிப்ப தாகும். ஆதலின் இன்ன ஆடவனுக்கு இன்னபெண் மனைவி என்று எழுதிக்கொள்ளும் பழக்கமும் இருந் திருக்கலாமன்றோ. அவ்வாறு எழுதுதலையே ஆசிரியர் தொல்காப்பியர் கரணம் என்று குறித் திருக்கலாமன்றோ? இன்றும் பழங்கால முறைப் படி திருமணம் கொள்வோர், திருமணத்துக்கு முன்னால் மணமகன் வீட்டாரும் மணமகள் வீட்டா ரும் மணமகள் வீட்டில் கூடி இவ்வாறு எழுதி உறுதிப்படுத்திக் கொள்வதைக் காணலாம். இந் நிகழ்ச்சியை மணவோலை எழுதுதல் என்றும், நிச்சயார்த்தம்' என்றும், வெற்றிலை பாக்கு மாற்றுதல்' என்றும் அழைப்பர். தொல்காப்பியர் காலத்து வழக்கமே இன்றும் தொடர்ந்து வந்துள் ளது என்று கொண்டால் குற்றம் என்னை இப் பழக்கமே பதிவு முறையாக வளர்ச்சி பெற்றுள்ளது. T ஆதலின் அன்று எழுத்துச் சான்றுடன் (கரண மொடு புணர) தலைவன் தலைவியைப் பெற்றான் என்று கூறுதல் பொருத்த முடைத்தாகும் என்பதில் தவறில்லை. களவில் தான் காதலித்த பெண்ணைப் பெற்றோர் அறிய, ஊர் அறிய, உலகம் அறிய மணந்துகொள்ளும் நிகழ்ச்சியைக் கற்பு என்றனர் ஆசிரியர். வெளிப்படாமலும் இவ்வாறு வரைந்து கொள்ள லாம். காதலிக்கும் ஒருவன் களவ காதல்மகளை மணந்து கொள்ள முடியாதநிலை ஏற்படுமேல் இருவரும் இக்