பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 பாயிரம் செய்வார் யாவர்? நச்சினார்க்கினியர் கூறுகின்றார் :- 'பாயிரம் செய்வார் தம் ஆசிரியரும் தம்மொடு ஒருங்கு கற்ற ஒரு சாலை மாணாக்கரும் தம் மாணாக்கரும் என இவர். அவருள் இந் நூற்குப் பாயிரம் செய்தார் தமக்கு ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரனார்". ஆதலின் பனம்பாரனார் தொல்காப்பியருடன் பயின்ற ஒரு சாலை (கல்விக்கூட) மாணாக்கர் ஆவார். உடன் காலத்தவரான பனம்பாரனார் கூறியுள்ள செய்திகள் வரலாற்றுண்மைக்குப் பொருந்துவனவாய் இருத்தல் வேண்டும். இப்பாயிரத்துள் கூறப்பட்டுள்ள முந்துநூல், நிலந்தருதிருவின் பாண்டியன், நான்மறை முற்றிய அதங்கோட்டாசான், ஐந்திரம் என்பவற்றின் உண்மை வரலாறு அறியப்படின், தொல்காப்பியர் காலத்தை எளிதில் வரையறுத்துக் கூறிவிட இயலும். எனவே இவை பற்றி உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர் கூறியுள்ளனவற்றை நோக்குவோம். முந்து நூல்: " "அகத்தியமும், மாபுராணமும், பூத புராணமும் இசை நுணுக்கமும்" இவை பற்றிய பிற செய்திகள் விளக்கமாகக் கிடைத்தில. ஆதலின் இங்குப் பயன் படா. நிலந்தருதிருவின் பாண்டியன் : "மாற்றாரது நிலத்தைக் கொள்ளும் போர்த் திருவினையுடைய பாண்டியன் மாகீர்த்தி அவையின் கண்ணே" என்று பொருள் கூறி, "பாண்டியன்