பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 179 காதலன் பிரித்துக் உடன் காலம் போல வாளா இருந்துவிடார். காதலியை அவள் பெற்றோரிடமிருந்து கொண்டு சென்றுவிடுவான். இதுதான் போக்கு என்னும் துறைக்கு உரியதாகும். இவ்வுடன் போக்கு இந்நாட்டில் சிறுவழக்காகவும் பிறநாடுகளில் பெருவழக்காகவும் நிகழக் காண்கிறோம். வயது வந்த பெண் தான் விரும்பிய காதலனுடன் மண வினை நோக்குடன் புறப்பட்டுச் செல்வது சட்டப்படி குற்றமும் ஆகாது. தலைவியின் விருப்பம் அறிந்து அவள் தூண்டுதலால் தலைவன் கொண்டு செல்வதால் வலிதிற் கொண்டு செல்லும் அரக்கர் முறையும் ஆகாது. இவ்வாறு கொண்டு செல்லும் தலைவன் தலைவியைக் கொடுக்கும் தமரின்றியும் மணந்து கொள்வான். "கொடுப்போ ரின்றியும் கரண முண்டே புணர்ந்துடன் போகிய காலை யான’ தமிழரிடையே பண்டு தொட்டு நடந்துவரும் திருமண முறையில் சாதிவேறுபாடு இல்லாதிருந்தது. சாதிகள் இல்லாத காலத்தில் சாதி வேறுபாடு எங்ஙனம் தோன்றும்? வருண வேறுபாட்டை எங்ஙனம் மேற் கொள்ள இயலும். வருண வேறுபாடு புகுந்த பின்னரும் சாதிகள் நிலைத்த பின்னரும் வருணத்துக்கு ஒருமுறையும் சாதிக்கு ஒரு பழக்க வழக்கமும் ஏற்பட்டு விட்டன. இவை ஏற்பட்ட பின்னர், மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே," என்ற நூற் பாவை இடைச் செருகலாக நுழைத்துள் ளனர். நாலு வருண வேறுபாடும், நால்வருணத் தினருள் மூவர் மேலோர் என்றும், ஒரு வருணத்தினர் கீழோர் என்றும் கொள்ளும் முறையும் தொல்