பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 காப்பியர் காலத்தில் தொல்காப்பிய ஆராய்ச்சிய தமிழகத்தில் தலைக்கொள்ள வில்லையே. இந்நூற்பா இயற்றப்பட்டது நால்வருண வேறுபாடு உண்டான காலத்தில்தான் என்பதை இந்நூற்பாவே வெளிப்படுத்துகின்றது. இந்நூற்பா கூறுவது என்ன? "மேலோர் மூவர்க்கும் உரிய கரணம் கீழோர்க்கும் ஒரு காலத்தில் உரியதாய் இருந்தது.ஆனால் இன்று இல்லையே" என்பதன்றோ? கீழ் வருணத்தைச் சார்ந்த ஒருவர் தம் பழமைச் சிறப்பை நினைத்து இரங்குவது போன்று அமைந் துள்ளதேயன்றி இலக்கணம் கூறுவதுபோல் அமைய வில்லையே. ஆசிரியரே கூறியிருப்பின் மேலோர்க்குரிய கரணம் இன்னது, கீழோர்க்குரிய கரணம் இன்னது என்றும் விளங்கக் காட்டியிருப்பர். அவ்வாறு பிரித்துக் கூறாதபோது மேலோர்க்குரிய கரணம் கீழோர்க்கும் உரியதாய் இருந்தது என்று கூறுவதில் பொருள் இல்லையே. ஆதலின் இந்நூற்பா இடைச் செருகல் என்று கொண்டு தள்ளற் பாலதேயாகும். இனி இக்கரணம் தோன்றுதற்குரிய காரணம். கூறினார். இல்லறம் என்பது நடைபெறுவதற்குக் கணவனும் மனைவியும் காதலால் கூடுதல் வேண்டும். காதலால் கூடிய ஆடவரும் மகளிரும் கணவனும் மனைவியுமாக இணைந்து என்றும் வாழ்தல் வேண்டும். மறைவாகக் காதல் பூண்டு ஒழுகி மகளிர் நலம் துய்த்துவிட்டுப் பின்னர் மகளிரைக் கைவிடும் ஆட வரும் இருந்திருப்பர். பல பூக்களை நாடும் ே ன் வண்டுபோல மகளிர் இளநலம் நாடி ஒருவரை விட்டு ஒருவரைப் பின்தொடரும் ஆடவரும் இருந்திருப்பர். மகளிர் அழகில் மயங்கி அவரைப் பன்முறையில் சிறப்பித்துக் கூறி அவர் காதலைப் பெற்ற பிறகு அவரை மறந்து வேறொரு பெண்ணிடம் காதல் வலை வீசும் ஆடவரும் இருந்திருப்பர். கூந்தல் நரைப்