பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 181 பினும் கொங்கை தளரினும் உன்னைக் கைவிடேன்' என்று உறுதிமொழி கூறிவிட்டுப் பின்னர்க் கைவிடும் ஆடவரும் இருந்திருப்பர். ஆதலின் தமிழ் நாட்டுத் தலைவர்கள் - பெரியோர்கள் - சான்றோர்கள் இங்ஙனம் பொய்யும் வழுவும் நிகழாமல் தடுத்தற் பொருட்டுக் காதலிப்போர், பலரும் அறிய கடிமணம் புரிய வேண்டும் என்று விதித்தனர். இதையே ஆசிரியர் தொல்காப்பியரும், 14 பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” என்று கூறிச் சென்றார். இதற்கு நச்சினார்க்கினியர் உரை விளக்கம் செய்யுங்கால் தம் காலத்து நிலவிய கொள்கைகளையும் தாம் கற்ற வடமொழிக் கருத்துக் களையும் கொண்டுவந்து புகுத்துகின்றார். tt அதற்கு ஏற்ப நூற்பாவில் வந்துள்ள 'என்ப' என்றது முதல் நூலாசிரியரை அன்று; வடநூலாரைக் கருதியது" என்று பொருளுரைத்துக் கொண்டார். இவ்வாறு கூறிக் கொண்டதே பெருந்தவறாகும். பனம்பாரனார் பாயிரத்துள் கூறியவாறு வடவேங் கடம் தென்குமரி யாயிடைத் தமிழ் கூறும் நல்லுல கத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி முந்து நூற்கண்டு முறைப்படக் கூறினாரேயன்றி, வடமொழி நூலைக் கண்டு வடவர் பழக்கங்களை ஏற்றுக் கூறினாரல்லர் ஆசிரியர். அவ்வாறு கூறியிருப்பின் தெளிவாகச் சுட்டி யுரைத்திருப்பர். "என்ப என்மனார்" என்பன வெல்லாம் தமக்கு முன்னுள்ள தமிழ் நூலார்களைச் சுட்டியனவேயன்றி வட மொழி நூலாரையன்று. ஐயர் யாத்தனர் கரணம்" என்பதற்கு "இருடிகள் மேலோர் கரணமும் கீழோர் கரணமும் வேறுபடக் காட்டினார்" என்று கூறினார். 'ஐயர்' என்னும்