பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 தொல்காப்பிய ஆராய்ச்சி சொல் தூயதமிழ்ச் சொல்; தலைவர், மேலோர், வியத்தகு சிறப்புடையோர் என்று பொருள்படும். இன்று மற்றவரை 'ஐய' என்று அழைப்பது 'ஐயர்' என்பதின் விளிவேற்றுமையாகும். தமிழ் நாட்டுப் பெரியவர்களை 'ஐயர்' என்று அழைப்பதைக் கண்ட வட நாட்டிலிருந்து வந்த பிராமணர் தம்மையும் 'ஐயர்' என்று அழைத்துக் கொண்டனர். பிராமணர் கள் தம்மை 'ஐயர்' என்றும், 'சாத்திரி' என்றும் அழைத்துக் கொண்டதைக்கண்ட ஐரோப்பியக் கிருத் தவப் பாதிரியார் தம்மை 'ஐயர்' என்றும். 'சாத்திரி. என்றும் அழைத்துக்கொண்டனர் அன்றோ? ஆதலின் தொல்காப்பியர் குறிப்பிடும் 'ஐயர்' வேறு, பிராமணர் வேறு. தொல்காப்பியர் நூற்பாவில் உள்ள ஐயர் தமிழ்நாட்டுப் பெரியோர்களையே குறிப்பதாகும். கூறினார். நச்சினார்க்கினியர் தாம் அவ்வாறு என்றால் இந்நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பிரா மணப் புலவர் ஒருவரும் இந்நூற்பாவுக்குத் தவறு படப் பொருளுரைத்து விட்டார்1. "ஆரிய மே லோர் வந்துதான் தமிழர்க்குத் திருமண ஒழுக்கங் களைக் கற்பித்தனர்' என்று துணிந்து கூறிவிட்டார். 'ஐயர்' என்னும் தமிழ்ச் சொல் 'ஆரிய' என்னும் சொல்லின் மரூஉ என்று கருதி விட்டார் போலும். தொல்காப்பியர் காலத்துக்குப் பன்னூறு ஆண்டு கட்கு முன்னர் திருமணச் சடங்கு அல்லது உறுதிச் சான்று இல்லாமல் தம்முள் காதலித்துக் கணவனும் மனைவியுமாய் வாழ்ந்தனர். பின்னர் அவ்வாறு வாழ்ந்து வருவதற்கு இடையூறாகப் பொய்யும் நம்பிக்கைக்கேடும் (வழு) தோன்றவே களவில் காதலித்தோர் கற்பில் திருமணம் செய்துகொள்ள 1. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி - மு. இராகவையங்கார்.