பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 தொல்காப்பிய ஆராய்ச்சி (கரணத்தின் அமைந்து - திருமணச் சடங்கில் பொருந்தி, முடிந்தகாலை= = எல்லாம் நன்கு நிறைவேறிய பின்பு, நெஞ்சு தளை அவிழ்ந்த உள்ள உறுதி நெகிழ்ந்த, புணர்ச்சிக் கண்ணும் = கூட்டத்தின் கண்ணும்.) இவ்வாறு கூடி மகிழ்ந்தவுடனே தலைவன் ஒருவன் கூறி மகிழ்கின்றான்: கடலால் சூழப்பட்ட இவ்வுலகி னையும், எளிதிற் பெறமுடியாத சிறப்பினை உடைய தேவருலகையும் ஒரு தட்டில் வைத்து, தலைவியோடு கூடிய இந்நாளை இன்னொரு தட்டில் வைத்து நிறுத்தால், இவ்விரண்டு உலகங்களும் இந்த ஒரு நாளைக்கு ஒப்பாகா. தலைவியோடு கூடியிருந்த நாளின் சிறப்புத்தான் என்னே! என்னே! என்று களிப்புக் கடலில் மூழ்குகின்றான்.

    • விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும் அரிதுபெறு சிறப்பின் புத்தேள் நாடும்

இரண்டும் தூக்கின் சீர்சா லாவே பூப்போல் உண்கண் பொன்போல் மேனி மாண்வரி யல்குல் குறுமகள் தோள்மாறு படூஉம் வைகலொடு எமக்கே." (குறுந்தொகை-101) இனி நச்சினார்க்கினியருடைய பொருந்தா உரை யைக் காண்போம். கரணத்தின் அமைந்து முடிந்த காலை- ஆதிக்கரணமும் ஐயர்யாத்த கரணமும் என்னும் இருவகைச் சடங்கானும் ஓர் குறை பாடின்றாய் மூன்று இரவின் முயக்கம் இன்றி ஆன்றோர்க்கு அமைந்த வகையாற் பள்ளி செய்து ஒழுகிய நான்காம் பகல் எல்லை முடிந்த காலத்து. ஆன்றோராவார். மதியும் கந்தருவரும் அங்கியும். நெஞ்சுதளை யவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும் - களவிற் புணர்ச்சி போலும் கற்பினும் மூன்று நாளும்