பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 185 கூட்டமின்மையானும் நிகழ்ந்த மனக்குறை தீரக் கூடிய கூட்டத்தின் கண்ணும், அது நாலாம் நாளை இரவின் கண்ணதாம். இங்கு மூன்று நாள் கூட்டமின்மை, ஆன்றோர் மதி, கந்தருவர், அங்கி, நாலாம் நாளை இரவு முதலியன வற்றைப் புகுத்தியுள்ளார். வீணே புகுத்தவில்லை. இந்நூற்பாவின் ஆறாம் துறையாக.

  • அல்லல் தீர ஆர்வமொ டளை இயச் சொல்லுறு பொருளின் கண்ணும்.”

என்று வருகின்றது. இதற்குப் பொருள் காணும் முகத்தான் தம் திட்டத்தை வெளிப்படுத்துகின்றார். பொருள் என்ன? அவர் கூறுகின்றார்: வரைந்த காலத்து மூன்று நாட் கூட்டமின்மைக்குக் காரணம் என்னென்று தலைவி மனத்து நிகழா நின்ற வருத்தம் தீரும்படி மிக்க வேட்கையோடு கூடியிருந்து வேதம் சொல்லுதலுற்ற பொருளின் கண்ணும், தலைவன் விரித்து விளங்கக் கூறும். அது முதல்நாள் தண்கதிர்ச் செல்வர்க்கும், இடை நாள் கந்தருவர்க்கும், பின்னாள் அங்கியங் கடவுளற் கும் அளித்து, நான்காம் நாள் அங்கியங்கடவுள் எனக்கு நின்னை அளிப்ப யான் நுகர வேண்டிற்று. அங்ஙனம் வேதம் கூறுதலால் எனத் தலைவிக்கு விளங்கக் கூறுதல். கணவனையன்றிக் கடவுளைத் தொழுதாலும் கற்புக்கு இழுக்கு என்று கருதி வந்த மகளிர் வாழ்ந்த தமிழ் நாட்டில் மூன்று நாள் இரவிலும் வேறு வேறு மூவரோடு கூடச் செய்துவிட்டு நான்காம் நாள். தான் கூடுவதாகத் தலைவன் கூறுகின்றான் என்று சொல்லு தல் எவ்வளவு பேதைமை ! பேதைமை மட்டுமன்று; அறஞ்சாராக் கொடுமையுமாகும். களவுக் காலத்தில்