பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 தொல்காப்பிய ஆராய்ச்சி காதலனோடு கூடினாள். சடங்கு நிகழ்ந்த பின்னர் மூன்று நாள் மூன்று தேவர்களோடு கூடினாள்; நான்காம் நாள்தான் கணவனோடு கூடினாள் என்று கூற அவர் நாக் கூசவில்லையே; எழுதுங்கால் எம்கை நடுங்குகின்றதே! நினைக்க நெஞ்சு நோகின்றதே! " வேதத்தில் உள்ளதைத் தமிழிலும் புகுத்த வேண்டுமென்ற வேண்டா விருப்பத்தினாலன்றோ இந்தக்கேடு. இதைப் படிக்கின்றோர் " தமிழர்க்கு நாகரிகம் என்பதே கிடையாது; வேதநெறியாளரே நாகரிகம் கற்பித்தனர்" என்று பறை சாற்றுவர். தமிழர்க்கு இது புதுமை என்பதனை அவரே கூறி விட்டார். 'உதாரணம் இக்காலத்தின்று" என்று கூறியதனால். தன் மனைவியைத் தேவரேயாயினும் பிறர்க்கு அளிக்கும் வழக்கம் கூறும் - அது கற்பனை யாய் இருப்பினும் தமிழில் என்றும் காணலரிது என் பதனை அவர் அறியார் போலும். இத்தொடரின் நேர்பொருள்: அல்லல் தீர=இல்லற வாழ்க் கையில் அவ்வப்போது உண்டாகும் துன்பம் நீங்க, ஆர்வமோடு அளைஇ விருப்பத்தோடு பொருந்தி, சொல்லுறு பொருளின் கண்ணும் - சொல்லுகின்ற பொருளுரையிடத்தும். குடும்ப வாழ்வு என்பது இடும்பை நிறைந்த தாகும். 'இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு " என்று திருவள்ளுவர் கூறுவதை நோக்குக. ஆதலின் குடும் பங்களில் துன்பம் வருங்கால் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதைத் தலைவன் அறிவுறுத் தும் வகையில் துறையமைத்து ஆசிரியர் தொல்காப் பியர் கூறியிருக்க நச்சினார்க்கினியர் தம் நச்சுரையைக் கூறித் தமிழர் இயல்பையே மாற்றித் தலைகுனியச் செய்து விட்டார்.