பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 தொல்காப்பிய ஆராய்ச்சி தலைவன் தலைவி வீட்டிற்கு வருங்கால் தலைவி வீட்டில் உள்ளவர்கள் தலைவியைப் பற்றிச் சிறப்பித் துக் கூறுதல் இயல்புதானே. தலைவியைப் பற்றித் தலைவன் ஒருவகையாக அறிந்திருப்பினும் மற்றவர் கூறக் கேட்டலினால் மகிழ்ச்சியும் தலைவியைப்பற்றிய உயர் எண்ணம் உறுதிப்படலும் நிகழுமன்றோ. கூற்று நிகழ்த்துதற்குரிய வாயில்களுள் பார்ப் பாரும் உள்ளனர். இப் பார்ப்பார் யார்? இக்காலத் தில் பிராமணர் பார்ப்பனர் என்று அழைக்கப் படுகின்றனர். ஆனால் பிராமணர் தாம் அவ்வாறு அழைக்கப்படுதலை விரும்பிலர். ஆதலின் பார்ப்பார் வேறு, பிராமணர் வேறு என்று தெளிதல் வேண்டும். தமிழ்நாட்டில் 'பார்ப்பார்" என்பது குலம் பற்றி வந்தது அன்று, தொழில் பற்றி வந்தது. 'பார்ப்பார்' என்றால் ஆராய்வார் என்று பொருள் படும். நூல்களை ஆராயும் தொழிலில் ஈடுபட்ட அறிஞர்கள் பார்ப்பார் என்று அழைக்கப் பட்டிருத்தல் வேண்டும். அவர்கள் நூல்களை ஆராய்ந்து பழமையை அறிந்து நிகழ்கால நிலையைத் தெரிந்து வருங்காலத்துக்குரியனவற்றை வகுத்து ரைக்கும் திறலுடையராய் இருந்திருத்தல் வேண்டும். இவ்வாற்றலுடைய அறிஞர்கள் யாவர்க்கும் இனிய நண்பர்களாய் அறிவுரை கூறி வந்திருந்தல் வேண்டும். பின்னர் ஆராய்ச்சி அறிவற்றோரும் பார்ப்பார் எனும் பட்டத்திற்குரியராய் ஆங்காங்குப் பணி புரிதலை மேற் கொண்டிருக்க வேண்டும். புலமையற்றோரும் பிற் காலத்தில் புலவர் எனக் கூறிக்கொண்டு இரந்து உயிர் வாழ்தலை மேற்கொண்டிருந்ததை அறிவோ மன்றோ? அவ்வாறே ஆராய்ச்சி அறிவற்றவர் பார்ப் யார் எனும் பெயரோடு குடும்பங்களில் தங்கியிருந்து லைவனுக்கு உதவி புரிந்து உயிர் வாழ்ந்தனர்