பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மாகீர்த்தி இருபத்து நாலாயிரம் யாண்டு வீற்றிருந்தா னாதலின் அவனும் அவன் அவையில் உள்ளோரும் அறிவு மிக்கிருத்தலின் அவர்கள் கேட்டிருப்ப" என்று விரிவுரையும் கூறுகின்றார். ஓர் அரசன் இருபத்து நாலாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தான் என்று கூறுவது உண்மைக்கு மாறுபட்ட செய்தியாகும்; கற்பனை அதன் வரம்பைக் கடந்துவிட்டது என்று கருத வேண்டியுளது. ஆகவே இங்கும் நச்சினார்க்கினியர் உரை நமக்குப் பயன்படாது கழிகின்றது. நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் : "நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையான் நான்மறை என்றார். அவை தைத்திரியமும் பௌடிகமும் தல்வகாரமும் சாம வேதமும் ஆம். இனி இருக்கும், யசுவும், சாமமும், அதர்வணமும் என்பாருமுளர். அது பொருந்தாது. இவர் இந்நூல் செய்த பின்னர் வேதவியாசர் சின்னாட் பல்பிணிச்சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற்றைச் செய்தாராகலின் எனும் உரை உண்மை யாயின் தொல்காப்பியர் வேதவியாசர்க்கு முற்பட்டவர் என்று கருதலாம். ஆனால் (Dr.P.S.) சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் இக்கூற்றை மறுக்கின்றார். "தைத்திரியம் பெளடிகம், தலவகாரம், சாம வேதம் என்ற பிரிவு கி.பி.ஆறு, ஏழு நூற்றாண்டுகட்குப் பிற்பட்ட சாசனங் களிலும் காணப்படுதலானும், பௌடிகம் என்பது ரிக் வேதத்தைக் குறிக்கும் பஹ்வ்ருச்சியம் என்ற வட மொழியின் தற்பவமாகலானும் அச்சொல் நாலாயிரப் பிரபந்தம் முதலிய நூல்களில் வழங்கப்படுகின்ற தானும், தலவகாரம் என்பது ஸாம வேதத்தின் ஒரு சாகையாதலானும், பாயிரத்துள் உள்ள நான்மறை என்பது அவற்றைக் குறிக்கும் என்றும், அக் காரணம்