பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 189 போலும். அவர்கள் செய்த பணிகள் தலைவனுக்குக் காதல் நிலை உரைத்தல், தேர்நிலை உரைத்தல், தலை வன் குறிப்பை யறிந்து பிறர்க்குக் கூறுதல், ஆ வந்த தனால் உண்டான நன்மை தீமைகளை உரைத்தல், வெளியில் செல்லுதற்குரிய காலத்தை உரைத்தல், செல்லாமல் இருத்தற்குரிய காரணத்தை உரைத்தல் முதலியனவாம். இப்பணிகளைப் பிற்காலங்களில் செல்வர் வீடுகளில் பிராமணர்களும் செய்திருக்கக். கூடும்.

    • காமநிலை உரைத்தலும். தேர்நிலை உரைத்தலும் கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும் ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்

செலவுறு கிளவியும், செலவழுங்கு கிளவியும் அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய.” இவ்வாறெல்லாம் துறைகள் அமைத்து இலக்கியம் இயற்றுதல் மரபு. இவையெல்லாம் தலைச்சங்கத் தாரும் இடைச்சங்கத்தாரும் செய்த பாடலுட் பயின்ற போலும், இக்காலத்தில் இலக்கியமின்று' என நச்சினார்க்கினியர் கூறுவதால் நச்சினார்க்கினியர் காலத்திலும் இவையனைய இலக்கியங்கள் கிடைத்தில் என்று அறியலாம். திருமணம் செய்துகொண்ட பின்னர் தலைவன் தலைவியிடமிருந்து பிரிதற்குரிய காரணங்களையும் பிரிந்து இருத்தற்குரிய கால வரையறையையும் குறிப் பிடுகின்றார். அக்கால மக்கள் வாழ்வில் பரத்தையர்க்கு இடம் இருந்துள்ளது. அதனாலன்றோ தொல்காப்பியருக்குப் பின்வந்த வள்ளுவர் பெருமான் "வரைவில் மகளிர் '*' கூட்டுறவைக் கடிந்துரைத்துத் தமிழ் மக்களைச் செம்மைப் படுத்தும் நிலை ஏற்பட்டது. எங்குத்தான் பரத்தையர் இல்லை? உலகெங்கணும் இருந்தனர் ;