பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 தொல்காப்பிய ஆராய்ச்சி மேரி உடோப்சு. ஆகவே தமிழர்கள் இத்துறை யிலும் கருத்துச் செலுத்தியிருந்தனர் என்று அறிகின் றோம். இக்காலத்தில் தலைவன் தலைவியுடன் இருத்தல் வேண்டும் என்று விதித்தனர்.

    • பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்

நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர் பரத்தையின் பிரிந்த காலை யான.' இக்காலத்தில் பரத்தைமை கொள்வது சட்டப் படி குற்றமே. பரத்தையின் பொருட்டுப் பிரிய வேண் டாம். ஆனால் குழந்தைபெற வேண்டாம் என்று அரசு அனைவரையும் வேண்டுகின்றது. பொருட் செலவு செய்து பல வகையிலும் குழந்தை வேண்டாக் கொள்கையைப் பரப்பி வருகின்றது. அவ்வியக்கத் திற்கு இந்நூற்பா பெரிதும் துணைபுரியும். அக் காலத்தில் கூடியிருக்க வேண்டும் என்று சொன்ன நாட்களில் இக்காலத்தில் பிரிந்திருக்க வேண்டும் என்று கூறுதல் வேண்டும். பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் நீத்து அகன்று உறைக என்மனார் புலவர் மக்கள் வேண்டா மனமுடை யோர்கள்," என்று முழங்குதல் நன்றன்றே. தொல்காப்பியர் மொழி நூலறிஞர் மட்டுமல்லர்; உடற்கூற்று அறிஞருமாவார் என்று தெரிந்து மகிழ்க! மகிழ்க! இனிக் கல்வியின் பொருட்டும் பிரிகின்றமைக்குக் காலவரையறை கூறுகின்றார். தொல்காப்பியர் காலத் தில் கல்விமுறை எவ்வாறு இருந்தது என்பதனை ஒருவாறு உய்த்துணர இயலுகின்றது. வேண்டிய கல்வி யாண்டு மூன்றிறவாது,' என்று கூறுவது சிறப்புக் கல்விக்குரிய காலவரை யறையாகும். ஆகவே அன்று கல்வி பொதுக் கல்வி