பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 197 என்றும் சிறப்புக் கல்வி என்றும் இருபிரிவுக்குட்பட் டிருந்திருக்க வேண்டும். பொதுக் கல்வி என்பது யாவரும் பெறவேண்டிய எண்ணும் எழுத்துமாகும். சிறப்புக் கல்வியென்பது ஏதேனும் ஒரு தொழில் பற்றிய கல்வியாகும். திருமணம் ஆன பின்னர் சிறப் புக் கல்வியின் பொருட்டு மூன்று ஆண்டு பிரிந்திருக்க லாம் என்பதனால் திருமணம் ஆகும் வரையில் தம் ஊரிலேயே பொதுக் கல்வியைக் கற்றிருப்பர். வெளி யூர்க்குக் கல்வியின் பொருட்டுப் பிரிவது தம் ஊரில் பெறமுடியாத உயர் கல்வி என்றுதான் கொள்ள வேண்டும். இப்பொழுதும் சிறப்புக் கல்வியான மருத்துவம், பொறியியல், மொழி இயல் முதலிய துறைகளில் பட்டம் பெற வேண்டுமெனில் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் பயில வேண்டியுள்ளது. ஓர் ஆண்டில் ஆறு திங்கள் தான் பயிலும் நாட்கள் ஆதலின் இன்றைய ஆறு ஆண்டும் அன்றைய மூன்று ஆண்டும் கால அளவில் ஒத்துள்ளன என்பதை அறியலாம். திருமண வயது ஆடவனுக்குப் பதினாறு வயது என்று உரையாசிரியர்கள் கூறியுள்ளனர். பதினாறு அல்லது பதினெட்டு வயது வரையில் தம் ஊரில் பயின்றுவிட்டுத் திருமணம் ஆனவுடன் பதினெட்டு வயதுக்கு மேல் வெளியூர்களில் சென்று சிறப்புக் கல்வியாம் உயர் கல்வியைக் கற்றுவந்தனர் போலும். அக்காலத்தில் யாவரும் கல்வி கற்றல் வேண்டும் என்பதும், கற்றவாறு ஒழுகல் வேண்டும் என்பதும் வற்புறுத்தப்பட்டுள்ளன. கல்வியைக் கண்ணெனப் போற்றினர். 13-1454