பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 'யாறும் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப” 197 கா' என்பது பூஞ்சோலை. இக்காலப் பூங்கா (Park) போன்றது.இன்று பணிமனையில் உள்ளோர்க்கு சட்டப்படி வாரத்தில் ஒருநாள் விடுமுறை கிடைத் தாலும், மனைவி மக்களோடு சென்று இன்பப் பொழுது போக்க ஏற்ற வசதிகளைப் பெற்றிலர். வெளி நாடுகளில் அதற்குரிய வசதிகளையும் அரசே செய்து கொடுக்கின்றதாம். நம் நாட்டிலும் அந்நிலை விரைவில் தோன்றுவதாக. உழைப்பும் வேண்டும். ஓய்வும் வேண்டும். ஓய்வில்லா உழைப்பு உயர் பயனை அளியாது. புதியன புனையும் புத்தறிவிற்கு வேண்டப் படுவது பயனுள்ள பொழுது போக்கே. பண்டைத் தமிழர்கள் வாழ்வு முழுதினையும் ஒரே தொடர்ச்சி யாகக் கொண்டனர். கல்வி கற்றல் என்பது வாழ் நாள் முழுவதும் நிகழவேண்டிய ஒன்று எனக் கருதினர். கல்வி கற்றுப் பருவம் எய்தியவுடன் துணைவியை நாடிப்பெற்று இருவரும் இன்பம் துய்த்துக்கொண்டே இல்லறக் கடமைகளை ஆற்ற வேண்டும் என்று எண்ணினர். மணமின்றி வாழும் பிரம்மச்சரிய நிலையும், மனைவியைத் துறந்து வாழும் துறவி நிலையும் தமிழர் வாழ்வியல் நெறிக்குப் புறம்பானவை. கட்டிளமைப் பருவத்தில் காதல் உணர்வு தோன்றியவுடன் கடிமணம் புரிந்து மனைவி மக்களுடன் சுற்றமும் சூழ நல்லனவே - நாட்டு மக்களுக்கு ஏற்றனவே - இயற்றுதல் வேண்டும். ஏன் பிறந்தோம் என்று பிறந்ததன் காரணத்தை ஆராயாது எதற்குப் பிறந்தோம் என்று செய்ய வேண்டியதைச் சிந்தனையில் கொண்டார்கள். எதனால் இறந்தார்கள் என்ற கேள்விக்கு இடமில் லாது, எதற்காக இறந்தார் என்ற கேள்விக்கு விடை