பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 தொல்காப்பிய ஆராய்ச்சி கொண்டு அவள் பின்னால் சென்று, பெண் யானையின் கை போன்ற பின்னலுற்ற சடையைப் பொருந்தி அவள் கண்களைக் கைகளால் மறைத்து, அவள் கைகளால் மென்மையாகத் தடவப்பெறப் பொருந்தியதோ? "கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகம் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் அந்தீம் கிளவிக் குறுமகள் மென்றோள் பெறல்நசைஇச் சென்றஎன் நெஞ்சே!. அகநானூ.(9) நெஞ்சை உயிருடையதாகவும், கைகள் பெற்றி ருப்பதாகவும், தலைவியைச் சென்று கூடியதாகவும் கூறப்பட்டிருப்பது வழக்காற்றுக்கு மாறுபட்டிருப் பினும் படிப்போர்க்குச் சுவை விளைப்பது மட்டுமன்றி தலைவன் எண்ணத்தை அப்படியே சொல்லோவியப்படுத்தியுள்ள தன்றோ? "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி ! காமம் செப்பாது கண்டது மொழிமோ! என்னுங்கால் ஒன்றுமறியாத தும்பியை நோக்கி "நடுநிலை தவறாது கூறுக" என்பதும் கற்பனைதானே! காதலர்கள் கனவுலகில் திளைப்பதும் இயல்பு. அவர்கள் கனவுகளை அடிப்படையாக வைத்து செய்யுட்கள் சீர்பட யாக்கலாம். தலைவி துணைவ னுடன் புறப்பட்டுப்போன செய்தியைக்கூறு மிடத்து செவிலி கனவு கண்டதாகக் கூறலாம். செவிலியை ஆசிரியர் தாயெனவே கூறுவார். பெற்ற தாயை நற்றாய் என்பர்.