பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 தொல்காப்பிய ஆராய்ச்சி காதல் நோயால் தலைவிக்கு உடல் வாடினாலும் உயிர் வருந்தினாலும் இவைகளைப் பொருட்படுத் தாதவள்போல் என்ன நிகழ்ந்துவிட்டன? ஏன் என்று கூற உரியவளேயன்றித் தலைவனைச் சென்று அடைவதற்கு உரியவள் அல்லள். தலைவிக்கு "மடன்" வேண்டும். மடன் என்றால் அறியாமையன்று. அறிந்தும் அறியாள் போன்றிருக்கும் நிலை. இல்லறம் இனிது நடைபெறத் தலைவனின் தவறுகளை அறிந்து இருப்பினும் அறியாள் போன்று ஒழுகுதல் தலைவிக் குரிய இயல்பு. இம் மடன் எப்பொழுதும் கொள்ளப் பட வேண்டியதன்று. தலைவன் தான்வேறு ஒருத் தியை நாடவில்லையென்று பொய் கூறுங்காலும், தலைவிக்கு வேட்கை மிகுந்தாலும் மடன் வேண்டிய தன்று. மடனை விடுத்துத் தலைவி கூறுவது போல் இலக்கியம் இயற்றலாம். யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. (குறள் 1314) இக்குறட்பாவில் மடன் நீங்கியுள்ளமை காண்க. அறத்தொடு நிற்றல் வேண்டுமென்று தலைவி விரும்புங் காலத்தில்தான் தோழி அறத்தொடு நிற்றல் வேண்டும். அஃதாவது தலைவியின் காதலைப் பெற்றோர்களுக்கு அறிவித்தல் வேண்டும். காதலைப் பற்றி அறிவித்தலை அறத்தொடு நிற்றல் என்றது ஏன்? காதலித்தவனை மணத்தலே அறத்தின்பாற் பட்டது. அவனையின்றி வேறொருவனுக்கு மணம் செய்யப் பெற்றோர்கள் கருதுவரேல் அவ்வொழுக்கம் இழுக்கின்பாற்படும். ஆதலின் பெற்றோர்கள் வேறொருவனுக்கு மணம் பேசுதலையறிந்த தலைவி தன் காதல் எவன்பால் பட்டது என்பதை அறிவிக் கச் செய்து அவனையே மணப்பாள். அவ்வாறு மணத்தல் தான் அறத்தின்பால் பட்டதாகும்.