பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 தொல்காப்பிய ஆராய்ச்சி இவ்வருங் குணங்களைப் பெற்றுள்ள பெண் ணினத்தைச் சேர்ந்துள்ள தலைவியின் உள்ளக் கருத்தை எளிதில் அறிதல் இயலுமா? இயலா தன்றோ? தன்னைக் காதலிப்பவன் விரைவினில் மணந்து கொள்ள வேண்டுமென்று தலைவி விரும்புவாள். ஆயினும் அவ்விருப்பத்தை வெளிப்படையாகக் கூறி விடமாட்டாள். "நீ என்னை விரைவில் மணந்து கொள்" என்று வெளிப்படையாகச் சொல்ல மாட்டாள். சொல்வது போல் இலக்கியம் அமைதல் கூடாது. திரைக் காட்சிகளில் பெண்ணியல்புக்கு மாறாகப் பெண்கள் நடப்பதைக் காண்கின்றோம். அதைக் கண்ணுறும் பெண்களும் அவ்வாறு நடக்க முற்பட்டு விடுகின்றனர். தமிழ்ப் பெண்ணியல் நுட்பம் அறியாதார் திரைக்காட்சியியக்குநராக இருத்தலினால் தான் இத்தாழ்வு என்பர். தலைவன் தன்னை விரைவில் மணந்து கொள்ள வேண்டுமென்று விரும்புங்காலத்தில் தலைவியும் தோழியும் குறிப்பாகக் கூறுவர் "நீ வரும்பொழுதும், வரும்வழியும் தீமை பயப்பன. காவல் மிகுதி. உன் வருகை உனக்குத் தீங்கு பயப்பது மட்டுமின்றி எனக்கும் தீங்கு பயக்கும். உன் தீங்கு என் தீங் கன்றோ,பகலில் வாரற்க' என்பர். பின்னர் இரவி லும் வாரற்க என்பர். பகலிலும் வாரேல், இரவிலும் வாரேல் என்றால் என்ன? விரைவில் மணந்து கொண்டுவிடு என்பது தானே? அக்காலத்தில் ஊர்திகளாக இருந்தன தேரும், யானையும், குதிரையும் கோவேறு கழுதையும் பல் லக்குமாம். இவ்வாறு விரைந்து வரும் தலைவன் காவல் மிகுதியால் தலைவியைக் காண முடியாத நிலை